• search
சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

100வது பிறந்தநாள்.. கேக் வெட்டியபோது பாட்டி கைது.. பின்னணியில் நெகிழ்ச்சி காரணம்!

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 100வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், அந்த கைதின் பின்னணியில் உள்ள காரணம் நெட்டிசன்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

என்னதான் வெளிப்படையாக எனக்கெல்லாம் ஒரு ஆசையும் கிடையாதுப்பா.. எனக் கூறிக் கொண்டாலும், ஒவ்வொருவருமே வித்தியாசமான ஏதாவது ஒரு ஆசையை உள்மனதிற்குள் ரகசியமகப் பொத்தித்தான் வைத்திருப்பார்கள். இது ஆளுக்கு ஆள் வேறுபடலாமே தவிர இவர் ஆசைகளே இல்லாத மனிதன் என யாரையும் கூறிவிட முடியாது. இப்படிப்பட்ட ஆசைகளை பக்கெட் லிஸ்ட் என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

அப்படி ஒரு பாட்டியின் பக்கெட் லிஸ்ட் ஆசையைத்தான் வித்தியாசமாக நிறைவேற்றி, சமூகவலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர் ஆஸ்திரேலியப் போலீசார்.

அதி��டி கைது

அதி��டி கைது

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜீன் என்ற மூதாட்டி சமீபத்தில் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு சைரன் பொருத்திய வாகனத்தில் சில போலீசார் வந்துள்ளனர். விழாவிற்கு வந்தவர்கள் நிதானிப்பதற்குள் அதிரடியாகக் கூட்டத்தில் நுழைந்து ஜீனை அவர்கள் கைது செய்தனர்.

குழப்பம்

குழப்பம்

இந்த சம்பவத்தைப் பார���த்து முதலில் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், கை விலங்கிட்ட நிலையில் ஜீனும், அந்த போலீசாரும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதைப் பார்த்து அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. பின்னர்தான், இது ஜீனுக்காக அப்பகுதி போலீசார் தந்த சர்ப்ரைஸ் பிறந்தநாள் பரிசு என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது.

நீண்டநாள் ஆசை

நீண்டநாள் ஆசை

அதாவது, ராணுவத்தில் செவிலியராக பணிபுரிந��து ஓய்வு பெற்றவரான ஜீனுக்கும் சில வித்தியாசமான ஆசைகள் இருந்துள்ளது. அதில் ஒன்று தான், தன் வாழ்நாளில் ஒருமுறையாவது போலீசார் தன்னை கைது செய்து, கைவிலங்கிட வேண்டும் என்பது. இது எப்படியோ அவர் குடியிருந்த பகுதி போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது.

சர்ப்ரைஸ் தந்த போலீஸ்

சர்ப்ரைஸ் தந்த போலீஸ்

எனவே, ஜீனுக்கு அவரது 100வது பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என அவர்கள் முடிவ�� செய்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் மேற்கூறிய அந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த சர்ப்ரைஸ் கைதின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்டோரியா போலீசார் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

போலீஸ் விளக்கம்

போலீஸ் விளக்கம்

அந்த பதிவில், "இதுபோன்ற கைதுகளை நாங்கள் மகிழ்ச்சியாகச் செய்கிறோம். ஜூனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது போலீசார் நுழைந்ததால��� எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. மேலும், ஜீனின் கையில் மெதுவாகத்தான் கைவிலங்கிட்டு அவரது விருப்பத்துடன் அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்" என சர்ச்சைகளில் சிக்காத வண்ணம் முன்கூட்டியே உஷாராக தன்னிலை விளக்கத்தையும் போலீசார் அளித்துள்ளனர்.

பாட்டி மகிழ்ச்சி

பாட்டி மகிழ்ச்சி

தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில், "இதுதான் என் சிறந்த பிறந்தநாளாக அமை���்தது. அவர்கள் அனைவரும் என்னை மிகவும் மென்மையாக நடத்தினார்கள். மிக்க நன்றி" என ஜீன் தெரிவித்துள்ளார். ஜீனைப் போலீசார் கைது செய்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், 'இப்படிக்கூட ஆசைப்படுவார்களா? 100 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீசாருக்கு பாராட்டுகள்" என கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

English summary
Jean Bickenton marked her 100th birthday with a very dramatic party. Police officers interrupted the celebrations to detain her, thereby fulfilling her wish. The 100-year-old used to work as an army nurse for decades before finally retiring from her long and satisfying job. All through her career she was never drunk or arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X