For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 12 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகரின் அருகேயுள்ளது சின்னபேளகொண்டபள்ளி. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று மதியம் வழக்கம்போல மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 மாணவ, மாணவிகளுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவ, மாணவிகளை ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அரிசி சரியாக வேகாததுதான் உடல் நலக்குறைவுக்கு காரணம் என்று ஆசிரியர்கள் கூறினாலும், உணவில் பல்லி விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதனால் ஒசூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
At least 12 children fell ill Tuesday after having their mid-day meal at a government school in near Hosur. The children complained of vomitting after consuming the meal at the government school in Krishnagiri district, and were examined at a hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X