உதகையில் 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீலகிரி மாவட்டம் உதகையில் 122-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

உதகையில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து வண்ண வண்ண மலர்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியர் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

122rd Flower Show starts in Ooty

இந்த மலர்க்கண்காட்சி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலர்க்கண்காட்சியில் சுமார் ஒரு லட்சம் மலர்களால் உருவான மேட்டூர் அணை மற்றும் வள்ளுவர்கோட்டம் உள்ளிட்டவைகளின் மாதிரிகள், செல்பி ஸ்பாட் உள்ளிட்டவை பார்வையாளர்கள் பிரம்மித்து ரசிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்ட ரகங்களில், சுமார் 35 ஆயிரம் தொட்டிகளில் ஆயிரக்கணக்கான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மலர்க்கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பலவண்ண மலர்கள், வண்ண வண்ண விளக்குகளின் அலங்கரிப்புகள், போன்றவற்றினை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ரூ.1,850 கோடி மதிப்பீட்டினாலான குந்தா நீரேற்றுப் புனல் மின் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் 7.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 7 திட்டப்பணிகளையும் அவர் வழங்க உள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The 122nd Flower show begins today in Ooty. This was done by Chief Minister Edappadi Palinasamy. There are many tourist attractions. Today, Nilgiris District has been given a local holiday for the exhibition.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற