For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை ப்ளஸ் டூ ரிசல்ட்: எந்தெந்த இணையதளத்தில் பார்க்கலாம்?? இதோ லிஸ்ட்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. இந்த ரிசல்ட்டை எந்தெந்த இணையதளத்தில் பார்க்கலாம் என்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. இரு மாநிலங்களிலும் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள்.

மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

3 நாட்களுக்கு முன்பே ரெடி

3 நாட்களுக்கு முன்பே ரெடி

புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள்கள் மதிப்பீடு முடிவடைந்து மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு மதிப்பெண்கள் சரியாக பதிவு செய்யப்பட்டதா என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தேர்வு முடிவு கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே தயாராகிவிட்டது. இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்படுகிறது.

இணைதள முகவரிகள்

இணைதள முகவரிகள்

தேர்வு முடிவை அனைவரும் இந்த 3 இணையதளங்கள் மூலமாக பார்க்கலாம்..

www.tnr-esults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

எஸ்எம்எஸ் வசதியும் உண்டு

எஸ்எம்எஸ் வசதியும் உண்டு

12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான அடுத்த 10 நிமிடத்தில், தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளிலும் முடிவுகள்

பள்ளிகளிலும் முடிவுகள்

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

15ல் மதிப்பெண் சான்றிதழ்

15ல் மதிப்பெண் சான்றிதழ்

மேலும் 15-ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

English summary
12th standared results will be announced tomorrow in Tamilnadu and Puducherry. Studetns can see the result on internet and they can get through SMS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X