For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 13 எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 13 காவல்துறை கண்காணிப்பு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவில், "நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், சென்னை தலைமையக துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். கோவை நகர தலைமையக துணை கமிஷனர் மகேஸ்வரன், நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்பார்.

13 SP's in TN transferred suddenly

சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஜெயந்தி, மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

மதுரை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமையாள், மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக பதவி ஏற்பார். மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளர் சக்திவேல், திருச்சி மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

திருச்சி மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனர் சசிமோகன், சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார். கோவை புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4வது பட்டாலியன் கமாண்டண்ட் மூர்த்தி, கோவை நகர தலைமையக துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவி ஏற்பார். வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரி, தமிழ்நாடு வணிக குற்றப்புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்பார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2வது பட்டாலியன் துணை கமாண்டண்ட் சுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்று, கோவை புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4வது பட்டாலியன் கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In TN, 13 police superintendents transferred to various place and shuffled by Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X