For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த்தின் புது 'சென்டிமென்ட்'.. 14 தொகுதி.. 14ம் தேதி வேட்பாளர் பட்டியல்.. 14 நாள் பிரசாரம்!

|

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குத் தெரிந்தோ, தெரியாமலோ 14ம் எண் அவரது புதிய சென்டிமென்ட் எண்ணாக மாறியுள்ளது.

அவருக்கு பாஜக ஒதுக்கப் போவதாக கூறப்படுவது 14 தொகுதிகள். அவர் தனது வேட்பாளர் பட்டியலையும் மார்ச் 14ம் தேதிதான் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம். மேலும் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப் போவதும் 14 நாட்கள்தான்..

இந்த 14 என்ற எண் தற்செயலாக அமைந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா என்பது ஆர்வத்துக்குரியதாக மாறியுள்ளது.

எப்பவுமே குழப்பம்தான் பாஸ்

எப்பவுமே குழப்பம்தான் பாஸ்

தேமுதிக என்றாலே குழப்பம் என்பது ரொம்ப நாளாக மக்களுக்குப் பழகிப் போய் விட்டது. ஆரம்பத்தில் மக்கள் கூட்டணி என்றார்கள். பின்னர் அதிமுகவுடன் சேர்ந்தார்கள். தற்போது பாஜக கூட்டணிக்கு வந்து விட்டார்கள்.

தொகுதிப் பங்கீட்டில் மகா சிக்கல்

தொகுதிப் பங்கீட்டில் மகா சிக்கல்

ஆனால் பாஜக கூட்ணியில் மெகா சிக்கலாகி விட்டது. ஆரம்பத்தில் 20 தொகுதிகளுக்கு மேல் கேட்டார்கள். ஆனால் பாஜகவால் அவ்வளவு தர முடியாத நிலை.

தற்போது 14க்கு முடிவு

தற்போது 14க்கு முடிவு

இதையடுத்து படிப்படியாகப் பேசிப் பேசி இப்போது 14 தொகுதிகள் வரை பாஜக தர முடிவாகியுள்ளது.

14ம் தேதி வேட்பாளர் பட்டியல்

14ம் தேதி வேட்பாளர் பட்டியல்

இதையடுத்து மார்ச் 14ம் தேதி தனது கட்சியின் வேட்பாளர்கள் பெயரை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த்.

14ம் தேதியே பிரசாரமும்

14ம் தேதியே பிரசாரமும்

14ம் தேதி காலை தனது கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்கள் முன்னிலையில் தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை விஜயகாந்த் வெளியிடவுள்ளாராம். அன்றே தனது பிரசாரத்தையும் அவர் தொடங்குகிறார்.

14 நாட்கள்

14 நாட்கள்

விஜயகாந்த் தனது கட்சிக்கான பிரசாரத்தை 14ம் தேதியன்று தொடங்கி 14 நாட்கள் நடத்துகிறார். இந்த 14 நாட்களிலும் அவர் 40 தொகுதிகளையும் சுற்றி வரப் போகிறார்.

எல்லாமே 14.. எப்பூடி

எல்லாமே 14.. எப்பூடி

இப்படி எல்லாமே 14, 14 என்று வருவது தேமுதிகவினருக்கே ஆச்சரியமாகியுள்ளதாம். இது தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா என்பதுதான் தெரியவில்லை.

14தானே வந்திருக்கு.. ஏழரை வரவில்லையே என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்...

English summary
Number 14 has become new sentiment number for DMDK president Vijayakanth as the party has been allotted 14 seat. And the leader is set to release his candidates on March 14 and will launch the campaign on the same day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X