For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வரை போட்டி போட்டு சந்திக்கும் எம்எல்ஏக்கள் குழு... இன்று 15 பேர் போர்க்கொடி!

அதிமுக அம்மா அணி எம்எல்ஏக்கள் 15 பேர் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிச்சாமியை இன்று சந்தித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமியை அடுத்தடுத்து அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் சிறு சிறு குழுக்களாக தனித்தனியேமுதல்வர் பழனிச்சாமியை சந்தித்து வருவது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 MLA's from ADMK amma camp met CM at Secretariat today

பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் நேற்று பிற்பகல் திடீரென முதல்வரை நேரில் சந்தித்தனர். தங்களது தொகுதி பிரச்னை குறித்து முதல்வருடன் ஆலோசிப்பதற்காக வந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று 15 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இன்பதுரை, சந்திரசேகர், உமா மகேஸ்வரி, குணசேகர், பரமேஸ்வரி, சத்யா உள்ளிட்டோர் அமைச்ச்ர உதயகுமாருடன் சென்று முதல்வரை சந்தித்தனர்.

தொகுதி சார்ந்த பிரச்னைகளில் அமைச்சர்கள், அதிகாரிகளை சந்திக்க முடியாத நிலை இருப்பதால் இது குறித்து விவாதிக்க சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

English summary
ADMK amma camp MLAs 15 members met CM Palanisamy at secretariat fuels oil to political fire in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X