கடலூர், நாகை துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூர் மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடதிசையில் நகர்ந்துள்ளது. இன்று இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

1st number Storm warning cage in Nagai and Cuddalore ports

ஆனால் அது தமிழகத்துக்கு வெகு தொலைவில் இருப்பதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் கடலூர் மற்றும் நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களில் தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
1st number Storm warning cage in Nagai and Cuddalore ports. The low depression which formed in Bay of Bengal became severe.
Please Wait while comments are loading...