ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பயங்கரம்.. கார்-பைக் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் உடல்நசுங்கி பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனதர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பண்டுதன்பட்டி விளக்கு சாலையில் இன்று காலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென்று எதிர்பாராத விதமாக கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு சாலையில் பயணித்தது.

அப்போது எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்கள் முத்துமாரி, மற்றும் எபி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தொடர் விசாரணையில் மேற்கொண்டுள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!