கோவை சிறையில் விசாரணை கைதி கல்லால் அடித்து கொன்ற விவகாரம் : 2 வார்டன்கள் அதிரடி சஸ்பெண்ட்
கோவை சிறைத்துறை வார்டன்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

கோவை: கோவை சிறையில் விசாரணை கைதி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 வார்டன்கள் அதிரடியாக செய்யப்பட்டுள்ளனர்.
பீளமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ், அடிதடி வழக்கில் கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல அடிதடி வழக்கில் விஜய் என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைதாகி இதே சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். இருவருமே கோவை சிறையில் உள்ள மருத்துவரிடம் மனநல ஆலோசனை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் உணவு உண்ணும்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக உருவெடுத்தது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் பலமாக தாக்கி கொண்டனர். இதில் கைதி விஜய், ரமேஷை கல்லால் பயங்கரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து சிறை வளாகத்துக்குள் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லாலேயே ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், விசாரணை கைதி கொலை தொடர்பாக 2 வார்டன்கள் தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கல்லால் அடித்து கொன்ற கைதி விஜய்யிடம் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications