For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

21 பெண் எம்.எல்.ஏக்கள்... அதிமுகவுக்கு 16, திமுக 4.. காங்கிரஸுக்கு விஜயதாரணி மட்டும்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைக்கு இந்த முறை 21 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த தேர்தலை விட 7 எம்.எல்.ஏக்கள் அதிகமாகும். அதேசமயம் 2006 சட்டசபைத் தேர்தலில் வென்றவர்களை விட 1 குறைவாகும்..

தமிழக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு, குமுறல் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. அவ்வப்போது கணிசமான பேர் வருவார்கள். ஆனால் பெரும்பாலும் மிக மிக குறைந்த பிரதிநிதித்துவமே பெண்களுக்குக் கிடைத்து வருகிறது.

அதிமுகவில் மட்டுமே பெரும்பாலும் அதிக அளவிலான பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் அதிகம் பேர் போட்டியிட்டார்கள். அதில் கணிசமானோர் வென்றுள்ளனர்.

2006 தேர்தலில் 22- 2011ல் 14

2006 தேர்தலில் 22- 2011ல் 14

2011 சட்டசபைத் தேர்தலில் 14 பெண்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தனர். இது 2006 தேர்தலில் 22 பேராக இருந்தது. கடந்த சட்டசபைதான் மிகக் குறைந்த பெண் உறுப்பினர்களைக் கொண்டிருந்த சபையாகும்.

2016ல் 21

2016ல் 21

2016 சட்டசபைத் தேர்தலில் 21 பெண்கள் வெற்றி பெற்று சட்டசபையில் நுழைகின்றனர். முதல்வர் ஜெயலலிதா இதில் முக்கியமானவர் ஆவார்.

அதிமுக 16

அதிமுக 16

இந்த 21 பேரில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். அதாவது 16 பெண் உறுப்பினர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் யார்?

யார் யார்?

அதிமுக சார்பில் வென்ற உறுப்பினர்கள் ஜெயலலிதா - ஆர்.கே.நகர், ஜெயந்தி பத்மபநாபன் - குடியாத்தம், டாக்டர் நிலோபர் கபீல் - வாணியம்பாடி, சித்ரா - ஏற்காடு, வி.எம்.ராஜலட்சுமி - சங்கரன்கோவில், மனோன்மணி - வீரபாண்டி, டாக்டர் வி.சரோஜா- ராசிபுரம், பொன்.சரஸ்வதி -திருச்செங்கோடு, கஸ்தூரி வாசு - வால்பாறை, எம்.கீதா -கிருஷ்ணராயபுரம், எஸ்.வளர்மதி -ஸ்ரீரங்கம், பரமேஸ்வரி முருகன்- மண்ணச்சநல்லுர், சத்யா பன்னீர்செல்வம்- பண்ருட்டி, எம்.சந்திரபிரபா - ஸ்ரீவில்லிபுத்தூர், உமா மகேஸ்வரி - விளாத்திகுளம், மனோரஞ்சிதம் - ஊத்தங்கரை.

திமுக 4

திமுக 4

திமுகவைச் சேர்ந்தவர்கள் 4 பேர். அவர்கள்: வரலட்சுமி மதுசூதனன் - செங்கல்பட்டு, சீத்தாபதி சொக்கலிங்கம் - திண்டிவனம், கீதா ஜீவன் - தூத்துக்குடி, பூங்கோதை ஆலடி அருணா - ஆலங்குளம்.

காங்கிரஸில் விஜயதாரணி மட்டுமே

காங்கிரஸில் விஜயதாரணி மட்டுமே

காங்கிரஸ் சார்பில் வென்ற ஒரே பெண் வழக்கம் போல விஜயதாரணி மட்டுமே. விளவங்கோடு தொகுதியை அவர் தக்க வைத்து அசத்தியுள்ளார்.

English summary
During the 2011 Assembly election, 14 Women candidates won but now in the 2016 elections, 21 women have been elected to the assembly. ADMK is leading with 16 MLAs and DMK has only 4. Vijayadharani is the sole Women MLA for Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X