செல்லாத ஓட்டுகளாகப் பதிவான 23,000 தபால் ஓட்டுக்கள்.. பலரின் வெற்றி 'பறிபோனது' இப்படித்தான்!
சென்னை: சில்லறை வாக்கு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ ஆக முடியாமல் போன தவிப்பில் பலரும் உள்ளனர். அது காரணம், இது காரணம் என்ற வாதப் பிரதிவாதிங்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் பதிவான தபால் வாக்குகளில் 23,000 வாக்குகள் செல்லாத வாக்குகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் தொகுதியில்தான் அதிக அளவிலான செல்லாத தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தபால் வாக்குகள்தான் பலரது வெற்றி வாய்ப்பை பறித்துள்ளதாகவும் தெரிகிறது.
சிதம்பரம் தொகுதியில் 777 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபைத் தேர்தல்
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக 2வது இடத்தைப் பிடித்தது. மற்ற அணிகள், கட்சிகள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டன.

சொற்ப வித்தியாசத்தில்
உண்மையில் அதிமுக மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக அணிக்கும், திமுக அணிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1.1. சதவீதம் மட்டுமே.

பலர் தோல்வி
திமுகவைச் சேர்ந்த பலர் மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளனர். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். ராதாபுமரம் திமுக அப்பாவு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

தபால் வாக்குகளால் வந்த வினை
இப்படி வாக்குகள் பிரிய அவர் காரணம், இவர் காரணம் என்று வாதங்கள் நடந்து வந்தாலும் கூட உண்மையில் தபால் வாக்குகள்தான் பெரிய பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

3.99 லட்சம் தபால் வாக்குகள்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3.99 லட்சம் தபால் வாக்குகள் உள்ளன. இதில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 551 பேர் மட்டுமே தபால் வாக்கைப் பதிவு செய்தனர். அதில் 23,886 வாக்குகள் செல்லாத வாக்குகளாகியுள்ளன.

காரணம் பல
சரியாக முத்திரை பதிக்கப்படாதது, அதிகாரிகள் கையெழுத்து இல்லாதது என பல காரணங்களால் இவை செல்லாத வாக்குகளாகியுள்ளன. இந்த வாக்குகள் பல தொகுதிகளில் தோல்வி அடைந்தவர்களின் தோல்விக்குக் காரணமாகவும் அமைந்துள்ளனவாம்.

கிராமங்களில்தான் அதிகம்
நகர்ப்புற தொகுதிகளை விட கிராமப்புற தொகுதிகளில்தான் அதிக அளவில் செல்லாத வாக்குகள் போடப்பட்டுள்ளன. அதிலும் நெல்லை மாவட்டத்தில் 2092 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாகும்.

சிதம்பரத்தில் 777
தொகுதிகள் வரிசையில் சிதம்பரம் தொகுதியில் 777 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாக விழுந்துள்ளன. அதேபோல 1450 பேர் நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

தலையெழுத்து மாறியிருக்கும்
இந்த செல்லாத தபால் வாக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருந்திருந்தால் பலருடைய வெற்றி வாய்ப்பு உறுதியாகி இந்த நேரம் எம்.எல்.ஏவாகியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications