பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி.. கடலூரில் சோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலுர் அருகே பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 துப்பரவு பணியாளர்கள் விஷ வாயு தாக்கி பலியாயினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் சாலையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். பாதாள சாக்கடைக்குள் இறங்கி அவர்கள் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது.

3 cleaning personnel killed by poison gas attacked while cleaning the underground drainage in Cuddalore

இந்த சம்பவத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள கொடிக்கால் குப்பம் பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி என்ற ஜெயக்குமார், வேலு , சோரியம்குப்பம் முருகன் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ஊழியர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கடலூர் மாவட்ட சார் ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயுத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் போது உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near cuddalore 3 cleaning personnel killed by poison gas attacked while cleaning the underground drainage. This incident caused a major shock in the region.
Please Wait while comments are loading...