For Daily Alerts
தமிழக மீனவர்கள் 38 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படை கைது செய்து மீண்டும் தனது அட்டகாசத்தை பறைசாற்றியுள்ளது.
புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 38பேர் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நடுக்கடலில், இலங்கை கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொண்டு சென்ற 9 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்துவருவதை தமிழகத்தில் இருந்து பலரும் கண்டித்தும்கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த மாதம்கூட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.