சென்னையில் மின்பெட்டிகளை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு.. அமைச்சர் தங்கமணி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அக்கா-தங்கை பலி | ONEINDIA TAMIL

சென்னை: சென்னையில் மின்பெட்டிகளை ஆய்வுசெய்ய 5 பேர் கொண்ட அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 members committee has been formed to study about Electric pillar box: Minister Thangamani

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிறுமிகள் உயிரிழப்பை கேட்ட வருத்தமடைவதாக அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த 3 அதிகாரிகள் மற்றும் 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் மின்பெட்டிகளை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

அனைத்த பெட்டிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சீரமைக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்ற அமைச்சர் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள மின்கசிவு குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Thangamani said 5 members commitee has been formed to study about Electric piller box. Minister said action will be taken to prevent such accidents.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற