For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக எம்எல்ஏக்கள் 50 பேர் அதிமுகவுக்கு வரத் தயாராக உள்ளனர்.. கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி

திமுக எம்எல்ஏக்கள் 50 பேர் அதிமுகவுக்கு வரத் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக எம்எல்ஏக்கள் 50 பேர் அதிமுகவுக்கு வரத் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்குதான் வாக்களித்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரும் சசிகலாவின் தீவிர ஆதரவாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார்.

50 DMK MLAS are ready to come ADMK : K.T.Rajendira balaiji

அப்போது பேசிய அவர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக எழுந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்தார். திமுக எம்எல்ஏக்கள் 50 பேர் அதிமுகவுக்கு வர தயாராக உள்ளதாக கூறினார்.

திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவு

மேலும் அவர் பேசியதாவது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? 45 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கத் தயாராக வந்திருந்தனர் என்பது ஸ்டாலினுக்கு தெரியாது.

திமுக காணாமல் போயிருக்கும்

ரகசிய வாக்கொடுப்பு நடத்தியிருந்தால் அத்தோடு திமுக காணாமல் போய் இருக்கும். பணம் கொடுத்து எங்களது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்க துடிக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது.

முதல்வர் ஆகும் வாய்ப்பு இல்லை

89 திமுக எம்எல்ஏக்களில் 50 பேர் அதிமுகவிற்கு வரத் தயாராக உள்ளனர். ஸ்டாலின் ஜாதகத்தில் அவர் முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடையாது. ஆட்சியில் குறை இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் திருத்திக் கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் கே.டி.பாலாஜி பேசினார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அமைச்சரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

English summary
Minister K.T.Rajendira Balaji says that 50 DMK MLAS are ready to come ADMK. if we wOuld have conduct secret ballot DMK MLAs would have voted for us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X