• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெயலலிதா கையால் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வாங்கிய 59 பேர்.. யார் யார்?

|

சென்னை: மவுலிவாக்கம் மீட்புப் பணியில் ஈடுபட்ட 3743 பேருக்கு நேற்று சென்னையில் நடந்த பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழாவில் 59 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா தனது கையால் பரிசினையும், பாராட்டு சான்றிதழமையும் வழங்கிக் கெளரவித்தார்.

மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 61 பேர் இறந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களையும், உயிரிழந்தவர்களின் உடலையும் மீட்பதற்கு, தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த 3,743 பேர் குழுவாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களின் பணியை பாராட்டி, அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இதுதொடர்பான விழா நடைபெற்றது.

இதில் முதல்வர் ஜெயலலிதா கையால் பாராட்டுச் சான்றிதழையும், பரிசையும் பெற்ற அதிகாரிகள் விவரம்:

வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிப்புத் துறையின் ஆணையர் ஸ்ரீதர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கே.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அதிகாரி எம்.சம்பத்குமார்;

சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், கூடுதல் போலீஸ் கமிஷனர் (வடக்கு) கருணாசாகர், இணை கமிஷனர் (மேற்கு) கே.சண்முகவேல், தமிழ்நாடு கமாண்டோ படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் அரோரா, கமாண்டண்ட் சஜித்குமார், துணை சூப்பிரண்டு ஆர்.பி.இளங்கோ,

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் இணை இயக்குனர் (வடக்கு) எஸ்.விஜயசேகர், துணை இயக்குனர் (தலைமையகம்) என்.பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட அதிகாரி பி.சரவணகுமார், தேசிய பேரிடர் மீட்புப் படை டி.ஐ.ஜி. எஸ்.பி.செல்வன், கமாண்டண்ட் எம்.கே.வர்மா, துணை கமாண்டண்ட் பல்வீந்தர் சிங்; மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதா லட்சுமி, பொதுசுகாதாரத் துறை இயக்குனர் டாக் டர் கே.குழந்தைசாமி, மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் ஏ.சந்திரானந்தன்,

108 ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவின் அதிகாரிகள் பி.என்.ஸ்ரீதர், பி.பிரபுதாஸ், பி.ரூபன்; நகராட்சி நிர்வாகத் துறையின் மண்டல இயக்குனர் (ஆர்.டி.எம்.ஏ.) என்.எஸ்.பிரேமா, மண்டல செயற் பொறியாளர் ஏ.ராமமூர்த்தி, தாம்பரம் நகராட்சி கமிஷனர் என்.ரவிச்சந்திரன்,

ஊரக மேம்பாட்டுத் துறை கூடுதல் இயக்குனர்கள் கே.ராஜாமணி, ஜி.லட்சுமிபதி, காஞ்சீபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை அதிகாரி என்.அருள் ஜோதி அரசன்; பொதுப்பணித் துறை பொறியாளர்கள் கே.மோகன்ராஜ், டி.காந்திமதி நாதன், எஸ்.மனோகர்; நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் ஏ.செந்தில்நாதன், கே.ஜி.சத்தியபிரகாஷ், கே.ரகுராமன்,

59 officials receive certificates from CM

சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், இணை கமிஷனர் (தெற்கு) ஆர்.ஆனந்தகுமார், மண்டல அதிகாரி (பொறுப்பு) என்.மகேசன், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், தலைமை பொது மேலாளர் விஜய்குமார் சிங், இணை பொது மேலாளர் எம்.பாபு ராஜேந்திரன்,

சென்னை ஊர்க்காவல் படை பகுதி கமாண்டர் சந்திரசேகர் உமாபதி, பிரிவு கமாண்டர்கள் ஜி.ஆதிநாராயணசாமி, எம்.பிரபாகரன்; சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (எம்.ஐ.டி.) டீன் தாமரைச் செல்வி, துணை பேராசிரியர் கே.செந்தில்குமார், கல்வியாளர் ஏ.முகமது ரஷீத்;

அரக்கோணம் மோப்பநாய்ப் பிரிவு பயிற்சியாளர்கள் வி.விக்டர் ஜெய்ராஜ், ஏ.அன்பு, டி.விஸ்வநாதன், எஸ்.பாலமுருகன் மற்றும் அவர்களிடம் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் ரஸ்டம், தில்;

தமிழ்நாடு தீயணைப்பு துறை யின் மோப்பநாய்ப் பிரிவு பயிற்சியாளர்கள் ஜி.முரளி, சி. அரசு, டி.முரளி, ஏ.நாகலிங்கம், ஏ.அனிஷ்பாபு, எம்.மூர்த்தி, எம்.சுப்பையா, பி.சுகேஷ், டி.விஸ்வநாதன், வி.அம்பேத் கார் மற்றும் அவர்களிடம் பயிற்சி பெற்ற மோப்பநாய்கள் முறையே, ஜூலி, ஓரி, சேனா, ஜாக், ஜான்சி.

 
 
 
English summary
59 officials who were a part in the Moulivakkam rescue operations received certificates from CM in a function held yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X