சசிகலா கணவர் நடராஜனுக்கு 8 மணி நேர டயாலிசிஸ்.. தொடர் கண்காணிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசியின் கணவர் நடராஜன் உடலில் என்ன பிரச்சினை?-வீடியோ

சென்னை: உடல் நிலை மோசமான நிலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தினசரி கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்கு மேல் டயாலிசிஸ் செய்யப்படுகிறதாம்.

கடந்த 6 மாதமாக கல்லீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

8 hours dialysis for Natajaran Sasikala

இதுகுறித்து அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடுகையில், நடராஜனுக்கு கல்லீரல் கோளாறு ஏற்பட்டதோடு அவருக்கு சிறுநீரகமும் செயலழிந்து விட்டது.

தினமும் அவருக்கு சிறுநீரக சுத்திகரிப்பு எனப்படும் டயாலிசிஸும் செய்யப்படுகிறது. இத்துடன் நுரையீரல் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளதால் அவரால் சுவாசிக்க இயலவில்லை.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக கல்லீரலை தானமாக பெறுவதற்காக தமிழக அரசு உடல்உறுப்புகள் தான மையத்தில் பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடராஜனுக்கு 8 மணி நேரத்துக்கும் மேலாக டயாலிசிஸ் செய்யப்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த ஆண்டில் நடராஜன் கடந்த பிப்.5-ஆம் தேதி சுவாச கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK general secretary V K Sasikala's husband M Natarajan is in a critical condition after suffering multiple organ failure on Sunday. He has undergone dialysis for 8 hours and more.
Please Wait while comments are loading...