ஷாம்பு வாங்க கடைக்கு சென்ற சிறுவன்.. காலை சுற்றி கடித்த பாம்பு.. பரிதாப உயிரிழப்பு!
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பகுதியில் உள்ள ஜமீன் கோடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி முருகலட்சுமி. விவசாய வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர், கடைசி மகன் மாரிச் செல்வம்(12) நேற்றிரவு குளிப்பதற்காக தெருவில் உள்ள கடைக்கு சென்று ஷாம்பு வாங்க சென்றான்.

அந்த பகுதியில் இருள் சூழ்ந்து இருந்தால் அங்கு கிடந்த 3 அடி நீளம் கொண்ட பாம்பை சிறுவன் செல்வம் எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டான். பாம்பு அச்சிறுவனின் காலை சுற்றி, காலில் கடித்துள்ளது. இதனால் சிறுவன் அலறி துடித்ததால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். சிறிது நேரத்தில் சிறுவன் மாரிசெல்வம் மயங்கினான்.
இதனை தொடர்ந்து முதலுதவி சிகிச்சைக்காக மாரிச்செல்வம் உறவினரான ரெங்கராஜ் என்பவரும், மற்றுமொரு உறவினரும் இருசக்கர வாகனத்தில் சிறுவனை தூக்கி சென்று நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் ''இங்கே பார்க்க முடியாது, நீங்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லுங்கள்'' என்று கூறியுள்ளனர்.
பின்னர் இருவரும் சிறுவனை தூக்கி இருசக்கர வாகனத்தில், மின்னல் வேகத்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். கடைக்கு ஷாம்பு வாங்க சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மற்றொரு சம்பவம்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா. இவரது மகன் சேட் முகமது(27). ஐ.டி.ஐ முடித்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6மாதத்துக்கு முன்பு திருச்சிக்கு திரும்பி வந்தார். இவர் சிறுநீரக சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் எலியை பிடிக்க பயன்படுத்தும் பேஸ்ட் மற்றும் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சேட் முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications