மதுபானம் குடிக்கவைத்து நர்ஸ் பலாத்காரம்! புதரில் தள்ளிவிட்டு சென்ற மூவர்! செங்கல்பட்டில் வெறிச்செயல்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மதுபானம் ஊற்றி 20 வயது நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அவர் காரில் இருந்து புதரில் தள்ளிவிடப்பட்டார். இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேரை போலீசார் தேடுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வேறு இடத்தில் வேலை செய்ய விரும்பினார். இதனால் அவர் தீவிரமாக வேலை தேடி வந்தார். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறித்து அவருக்கு தகவல் கிடைத்தது.

நேர்முகத்தேர்வுக்கு புறப்பட்ட நர்ஸ்

நேர்முகத்தேர்வுக்கு புறப்பட்ட நர்ஸ்

இதையடுத்து வேலூரில் அந்த பணியில் சேர்வதற்காக இளம்பெண் விண்ணப்பித்தார். இதற்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தனது தோழிகளுடன் நள்ளிரவு பேருந்தில் செல்ல திட்டமிட்டுள்ளார்.இதுபற்றி அவருக்கு பழக்கமான ஆத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் அறிந்தார். சரவணனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து சரவணன் தானும் வருவதாக அவரிடம் கூறியுள்ளார். இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சரவணன் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர்

வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர்

இதையடுத்து சரவணன் தனது நண்பர்களான சஞ்சய், சூரிய பிரகாஷ் ஆகியோருடன் காரை எடுத்துக் கொண்டு சென்றார். இதில் சஞ்சய் கல்லூரி மாணவர். சூரிய பிரகாஷ் வழக்கறிஞர் ஆவார். செவிலியர் பெண்ணை பேருந்தில் பின்தொடர்ந்து சென்று காஞ்சிபுரத்தில் வலுக்கட்டாயமாக பெண்ணை காரில் ஏற்றியுள்ளனர்.

மதுபானம் குடிக்க வைத்து பலாத்காரம்

மதுபானம் குடிக்க வைத்து பலாத்காரம்

இதையடுத்து கட்டாயப்படுத்தி அவரது வாயில் மதுபானம் ஊற்றி சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பிறகு அப்பெண்ணை செங்கல்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்புதரில் தள்ளிவிட்டு சென்றனர். போதை தெளிந்து பெண் கண்விழித்தார். இதையடுத்து அவர் சிரமப்பட்டு தனது வீட்டுக்கு சென்றார். மேலும் தனக்கு நடந்த சம்பவத்தை எண்ணி அவர் மனம் உடைந்தார்.

தற்கொலைக்கு முயற்சி

தற்கொலைக்கு முயற்சி

இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து பெண்ணை அவரது தாய் மீட்டு விசாரித்தார். அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தாயிடம் கூறினார். இதையடுத்து உடனடியாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் காவல்துறையினர் விசாரித்தனர்.

 ஒருவர் கைது- 2 பேருக்கு வலைவீச்சு

ஒருவர் கைது- 2 பேருக்கு வலைவீச்சு

முக்கிய குற்றவாளியான சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+