காவிரியில் செல்பி எடுத்த பெற்றோர்.. தவறி ஆற்றில் விழுந்த 4 வயது குழந்தை.. நாமக்கல்லில் அதிர்ச்சி

நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் பெற்றோர் செல்பி எடுத்த போது கையில் இருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செல்பி எடுத்த பெற்றோர்.. தவறி ஆற்றில் விழுந்த 4 வயது குழந்தை.. வீடியோ

    நாமக்கல்: காவிரி ஆற்றில் பெற்றோர் செல்பி எடுத்த போது கையில் இருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் ஆற்று நீரை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

    ஆற்றில் விழுந்த குழந்தை

    ஆற்றில் விழுந்த குழந்தை

    இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வாங்கல் பாலத்தில் இருந்தபடி ஒரு பெற்றோர் காவிரியாற்றில் செல்பி எடுத்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த 4 வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்தது.

    தேடும் பணி தீவிரம்

    தேடும் பணி தீவிரம்

    பாலத்தின் நடுப்பகுதியில் நின்று அவர்கள் செல்பி எடுத்ததால் குழந்தை ஆற்றின் நடுப்பதியில் விழுந்து அடித்து செல்லப்பட்டது. குழந்தையை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    பெரும் துயரம்

    பெரும் துயரம்

    இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் அலறி துடித்தனர். குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கதறிய சம்பவம் காண்போரை கலங்க செய்தது. பெற்றோரின் செல்பி ஆசையால் 4 வயது குழந்தை அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே எச்சரிக்கை

    ஏற்கனவே எச்சரிக்கை

    ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் ஓரம் நின்று செல்பி எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+