விடாதே பிடி.. பைக்கில் போனவரை விபத்துக்குள்ளாக்கி தப்ப முயன்ற மாணவர்களுக்கு தர்ம அடி!
விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டி பிடித்துபொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
Recommended Video

சென்னை: சென்னையில் மது போதையில் காரை ஓட்டி பைக் மீது மோதிவிட்டு தப்பி சென்ற மருத்துவ கல்லூரி மாணவர்களை பொது மக்கள் விரட்டி பிடித்து தர்மடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூவிருந்தவல்லி அடுத்த காட்டுப்பாக்கம், ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் கார்த்திக் 35, கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது மவுண்ட் - பூவிருந்தவல்லி சாலை, செட்டியார் அகரம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். இதனைக்கண்டதும் அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் அங்கிருந்த சிலர் அந்த காரை விரட்டி ஆரம்பித்தனர். வேகமாக விரட்டி சென்ற பொதுமக்கள் அய்யப்பன்தாங்கல் பகுதியில் அந்த காரை மடக்கி பிடித்தனர். மேலும் அந்த காரில் இருந்த நபர்கள் கீழே இறங்காமல் காரின் உள்ளே இருந்தனர்.
பின்னர் வலுகட்டாயமாக கீழே இறக்கி அவர்களை தாக்கியது மட்டுமல்லாது விலையுயர்ந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரையும், அடித்து நொறுக்கப்பட்ட காரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதுகுறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மதுரவாயலை சேர்ந்த மருத்துவர் திலிப் என்பவரது மகன் அக்ஷய் 23, என்பதும் போரூரில் உள்ள தனியார் மருத்து கல்லூரியில் 4ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வரும் இவர், மதுபோதையில் காரை ஓட்டி வந்து பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றும் தெரியவந்தது. இது குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றபோது செய்தி சேகரிக்க கூடாது என்று பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் சீனிவாசன் மிரட்டினார்.அதோடு மட்டுமல்லாமல் செய்தியாளர் படம் பிடிக்க கூடாது என்பதற்காக அவசர,அவசரமாக காரின் எண் அகற்றப்பட்டது. இதுகுறித்து அக்ஷய் யிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications