வீட்டுக்கு வந்த 4 பேர்..கடனுக்காக பெற்ற மகளையே! கள்ளக்குறிச்சியை கதிகலங்க வைத்த சத்யா! பரபர ட்விஸ்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே7 வயது பெண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்து, காணாமல் போனதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமாவாசைக்குள் கடனை அடைப்பதாக கடன்காரர்களிடம் கூறிய நிலையில், வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கடனை கேட்க மாட்டார்கள் என நினைத்து பெற்ற மகளையே கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார் கைதான தாய்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவரது மகன் பிரகாஷ். லாரி டிரைவரான இவருக்கு சத்யா என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு 13 வயதில் ஆதவன் என்ற மகனும், அக்ஷயா, அதிஷயா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், அதிசயா அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அதிசயாவைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை பிரகாஷ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன சிறுமியை தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து கிராமத்தில் உள்ள கிணறுகள், ஏரிகள், குளங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அதே கிராமத்தில், அன்றைய தினம் கொண்டாடப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்த போது, சிறுமி அதிசயா காணாமல் போனதால், எங்கு பார்த்தாலும் சோகத்துடன் தேர் திருவிழாவை கூட கொண்டாட முடியாமல் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து போலீசார் மோப்ப நாய்களை வரவழைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காணாமல் போன சிறுமியை தேடும் பணியில் தீவிரம் காட்டினர். இதையடுத்து கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த பூட்டை கிராமத்திற்கு வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சிறுமி அதிசயாவைத் தேடி வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் அதிசயாவின் தந்தை பிரகாஷ் மற்றும் தாய் சத்யாவிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது சத்யா கூறிய தகவலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதை உறுதி செய்தனர்.
அதில், மகளை சத்யா அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் சத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, மகளை கிணற்றில் வீசி கொன்றதை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, சத்யா" அதே ஊரில் பல்வேறு நபர்களிடம் ரூ.4 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ளேன். இந்தக் கடன் குறித்த விவரம் அவரது கணவருக்கும், குடும்பத்தினருக்கும் தெரியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் வாங்கியவர்களிடம் கூறிய காலக்கெடு முடிவடையும் நேரத்தில் குழந்தையை கொன்றால், கடன் கொடுத்தவர்கள் அனுதாபப்பட்டு, கடனை கேட்காமல் சென்று விடுவார்கள் என நினைத்து, சம்பவத்தன்று எனது மகளை சாலையோர கிணற்றில் கொலை செய்தேன்"என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சத்யாவைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications