For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணி வழங்காமல் இழுத்தடிப்பு.. பஸ் முன் படுத்த டிரைவரால் பதட்டம்!

தூத்துக்குடியில் பணி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பஸ் முன்பு படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: பணி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பஸ் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து உடன்குடி செல்லும் டவுன் பஸ்சில் டிரைவராக பணி செய்து வருகிறார்.

A govt bus driver protesting by lying down front of the bus near in Tuticorin

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடன்குடியில் இருந்து திசையன்விளை செல்லும் வழியில் நடந்த விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ரமேஷை கைது செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பஸ்சின் ஆர்சி புக் திருச்செந்தூர் ஆர்டிஒ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பஸ்சிற்கு நெல்லை ஆர்டிஒ அலுவலத்திற்கு எப்சி காண்பிக்க வேண்டி இருப்பதால் ஒரிஜினல் ஆர்சி புக் தேவைப்படுகிறது.

திருச்செந்தூர் ஆர்டிஒ அலுவலகம் சென்ற போது சம்பந்தப்பட்ட டிரைவரின் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தந்தால்தான் ஆர்சி புக்கை தர முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கண்ணனை தொடர்பு கொண்ட பஸ் நி்ர்வாகத்தினர் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை ஆர்டிஒ அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு ஆர்சி புக்கை வாங்கிர வரவேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் பணிக்கு வரவேண்டாம் என்றும் தெரிவித்ததால் அவர் பஸ் முன் திடீரென படுத்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அங்கு பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

English summary
A govt bus driver protesting by lying down front of the bus near in Tuticorin. This makes tension in the area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X