மெரினாவில் தேங்கிய மழை நீரில் மூழ்கி முதியவர் பரிதாப பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கனமழையால் மூழ்கியது மெரினா கடற்கரை- வீடியோ

  சென்னை: மெரினாவில் தேங்கிய மழை நீரில் மூழ்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.

  A old beggar man died after draining in Marina flood

  இதனால் சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை வெளுத்தது. இதனால் சென்னை மாநகர் வெள்ளத்தில் மிதக்கிறது.

  வெள்ள நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அதிகளவாக மெரினா கடலோர பகுதியில் 30 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

  இதனால் கடல் எது கரை எது என தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடலில் இருந்த சாலைவரை தண்ணீர் தேங்கியுள்ளது.

  இந்நிலையில் சென்னை விவேகானந்தர் இல்லம் அருகே முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த முதியவர் மெரினா கடற்கரை பகுதியில் பிச்சையெடுப்பவர் என தெரியவந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A old beggar man died after draining in Marina flood. Chennai marina recorded highest rain of 30cm.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற