இது வானவில் இல்லை பாஸ்.. வண்ணக் காத்தாடி..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவரில்லை. அப்படியே பார்க்க தவறும் நபர்களையும் சமூக வலைத்தளங்களின் மீம்ஸ் விடுவதில்லை. ஊடகச் செய்திகள், மீம்ஸ், பிக் பாஸ் பற்றிய விளம்பரம், அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சு என்று எதாவது ஒன்றை கடக்காமல் நம் அன்றாட பொழுது கழிவதில்லை இப்போது என்றாகிவிட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிய ஒரு அலசல் இது.

சிலர் இது நூறு நாட்கள் அந்த வீட்டில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளை இயல்பாக படம் பிடித்து காட்டும் நிகழ்ச்சி என்கின்றனர். அந்த சிலரில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் அவர்களும் நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனமும் தினம் அழவைக்கும் கதைகளை சீரியல் என்று நம்பி தினமும் தவறாமல் பார்க்கும் வகையில் வரும் ஏமாந்த சில தமிழ்நாடு ரசிகர்களும் அடங்குவர். இயல்பான நிகழ்ச்சி என்று அவர்கள் மட்டும் கத்தி கத்தி சொன்னால் போதுமா? பார்க்கிற மக்கள் சொல்கிறர்களா

பலர் இது எழுதி கொடுத்து நடிக்கும் நாடகம் என்கின்றனர். இயல்பாக நடக்கும் நிகழ்ச்சிகள் என்னவென்று பார்த்தால் உங்கள் நட்சத்திரங்கள் படுக்கைறையில் புரள்வது, பல்துலக்குவது போன்றவை மட்டுமே ஆகும். அதையும் தாண்டி நமீதா கழிவறையை சுத்தப்படுத்துவது போன்ற சில விஷயங்களிலும் லேசான இயல்புத்தன்மையும் தாண்டிய மிக அதிகமான நடிப்புத்தன்மையும் தான் தெரிகிறது.

நாடகத்தனமான ஜூலி

நாடகத்தனமான ஜூலி

எல்லாவற்றையும் மீறிய சத்தமாக ஒலிக்கும் ஜூலியிடம் ஏனோ முதலில் இருந்து ஒரு நாடகத்தனம் அதிகமாக தெரிகிறது. ஒரு வேளை அவர் நடிப்பு பக்கத்தில் இருந்து வராத காரணத்தால் அதிகம் நடிக்க தெரியாமல் ஓவர் ஆக்ட்டிங் செய்வதை நடிப்பு என்று நினைத்து கொண்டு விஜய் டிவி வழங்கும் வசனங்களை பேசுவதாலோ என்னவோ முதலில் இருந்தே அவர் மேல் ஒரு நம்பகமற்ற நடிப்பு தன்மை முத்திரை அவர் மேல் விழுந்து விட்டது. அது பிக் பாஸ் உணவு வரும் அறையில் நுழைந்து எல்லாரும் உணவை முதல் முதலாக பார்க்கும் போது பலர் அமைதியாருக்க அண்ணன் சோறு அண்ணன் சோறு சோறு என்று ஜூலி முதல் நாள் கூப்பாடு போட்டதில் இருந்தே ஆரம்பித்து விட்டது

ஓவியா படை

ஓவியா படை

இன்றைக்கு ஓவியா படை எல்லாம் உருவாகி ஓவியாவை காப்பாற்றுங்கள் என்று ஹாஸ் டேக் உருவாக்கிய போராடும் படையை நினைத்து சிரிக்க தான் முடிகிறது. சரி சினிமாவில் நடிக்கும் போது கூடாத இவ்வளவு பெரிய ரசிகர் வட்டம் இல்லாத ஓவியாவுக்கு எப்படி இவ்வளவு பெரிய படை வந்தது என்று யோசித்து பார்த்தீர்களா. இது தானாக சேர்ந்த கூட்டம் மாதிரி தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை நிஜம். இரண்டு பறவைகள் கொஞ்சுவதை பார்த்து ரசிக்கும் குழந்தை மனம் கொண்டவராக பிக் பாஸ்ஸிடம் ஒரு வாழைப்பழம் மட்டும் வைத்து விடு ப்ளீஸ் கண்ணை மூடிக்கொள்கிறேன் என கெஞ்சும் குழந்தை உள்ளம் கொண்டவராக ஓவியவாய் உருவாகப்படுத்தி காட்டியுள்ளது.

விரும்ப வைக்கிறார்கள்

விரும்ப வைக்கிறார்கள்

இப்படியாக அவர்கள் நடத்தும் நாடகத்தில் வரும் ஓவியாவின் முகத்தை விரும்ப தொடங்குறோம் விரும்ப வைக்கிறார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அது சரி உங்கள் தோட்டத்தில் இரு பறவைகள் கொஞ்சினால் நீங்களும் கொஞ்ச நேரம் நிற்க கூடும். அதை ரசிக்க கூடும். மெய்மறந்து போக கூடும். ஆனால் மனதிற்குள் ரசித்து எதாவது நினைப்போம் அதை விட்டு என்றாவது நம்மை மறந்து நாம் தனியாக பேசி இருந்த மாதிரி இதுவரை எந்த சந்தர்ப்பங்களும் வந்திருக்காது. இந்த ஒரு காட்சி போதும், அவர்களின் நாடக மேடையில் பறவைகளை பார்த்து பேசிய ஓவியா ஒரு குழந்தைத்தனம் கொண்ட பெண்ணாக காட்டப்படும் நபர் என்று. பேசியது ஒரு வரி அல்ல, இரண்டு நிமிட வசனம்.

சினேகனுக்கு இந்த முகம்

சினேகனுக்கு இந்த முகம்

ஓவியாவை குழந்தையாக காட்டும் அதே நிகழ்ச்சி பாடலாசிரியர் ஸ்நேகனை பெண்களை தவறான நோக்கோடு பார்க்கும் நபராக காட்டுகிறது. அவர் பெண்களை கட்டி பிடிக்கும் காட்சிகளை நீட்டி காண்பிக்கிறார்கள். ஜூலி வெளியேற போவதாக நினைத்து எல்லாருக்கும் விடைகொடுக்கும் காட்சியில் அவர் ஸ்நேகனை கட்டிப்பிடிக்கும் காட்சியாய் நீட்டி காண்பிக்கும் நேரம் அந்த கேமரா மற்ற சக நடிகர்களின் முகத்து பக்கம் போகலாமே. அவர்கள் சந்தோசப்படுகிறார்களா வருத்தம் கொள்கிறார்களா என்று அலசலாம். ஏன் அதை விட்டு விட்டு இந்த பிரியா விடை அணைப்பை மிக தப்பாக நீட்டி காட்டி என்ன செய்ய முயற்சிக்கிறார்கள். வெகு சுலபமாக பதில் சொல்லி விட முடியும் சினேகன் என்ற கதாபாத்திரத்திற்கு அவர்கள் அப்படி ஒரு முகம் கொடுக்க நினைப்பதால் அப்படி தான் காண்பிப்பார்கள். அதே பெண் சக்தியை, நமீதாவை என்று சிலரை கட்டிப்பிடிக்கும் போது இயல்பு தான் கேமரா. இப்படி சொல்வதற்கு இன்னும் எத்தனை எத்தனையோ இருக்கு அந்த நிகழ்ச்சியில்.

வானவில்லும், வண்ணக் காத்தாடியும்

வானவில்லும், வண்ணக் காத்தாடியும்

அவர்கள் அப்படி அப்படி இல்லை. அவர்கள் அப்படி அப்படி காட்டப்படுகிறார்கள். அவர்கள் அப்படி அப்படி பேசவில்லை அப்படி அப்படி பேசுவதாக காட்டப்படுகிறார்கள். அவர்கள் அவர்களாக இல்லை அவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வண்ணங்களில் அங்கு இருக்கலாம். ஆனால் அது இயல்பான வானவில் இல்லை, சாயம் பூசப்பட்ட நூல்கள். இது தான் ஸ்மால் பிரைன் கொண்ட பிக் பாஸ் குழுவின் சின்னத்தனமான வேலை. வானவில்லுக்கும் வண்ண காத்தாடிக்கும் வித்தியாசம் தெரியாத விசுவாசமான ரசிகர்களாக நாம் வாக்களித்து கொண்டிருப்போம்!

- யாழினி வளன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Our US reader Yazhini Valan has reviewed the much talked show Big Boss in this writeup.
Please Wait while comments are loading...