உப்புமா கிண்டும் ஓசை கேட்டால் வயிற்றில் புளியும் கரையுதே... கணவன்மார்கள் படும் பாடு.. வைரல் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Inkem..Inkem, இன்றும் இன்றும் என்றும் உப்புமாவா..?வேற ஏதும் டிபன் இல்லையா-வீடியோ

    சென்னை: சமைக்காத மனைவியை வைத்து கொண்டு ஆண்கள் படும்பாட்டை இந்த ஒற்றை பாடல் விவரிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் கல்லூரி முடித்தவுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு வீட்டு வேலைகள் என்பது அவ்வளவாக தெரிவதில்லை. முன் பழக்கம் இல்லாவிட்டாலும் துணி தோய்ப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது என்பன உள்ளிட்ட வேலைகளை செய்யலாம்.

    A video goes viral about husband criticises wifes breakfast

    ஆனால் சமையல் என்பது பழகினால் மட்டுமே வரும். என்னதான் சமையல் புத்தகங்கள், அம்மா கூறும் சமையல் டிப்ஸ், இணையம் மூலம் சமையல் என இருந்தாலும் அவை பழக பழகத்தான் வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் சமைக்க தெரியாத மனைவியுடன் கணவர் ஒருவர் பாடுபடுவதை சித்தரித்து காண்பித்துள்ளனர். அதை இருவரும் பாட்டாகவே பாடியுள்ளனர். அந்த வீடியோவில் வரும் பெண் உப்புமாவை டைனிங் டேபிளில் வைத்துள்ளேன். எடுத்து போட்டு சாப்பிடுங்கள் நேரம் ஆகிறது என்கிறார்.

    அதற்கு கணவர் பாடல் மூலம் பதிலளிக்கிறார். அந்த பாடல் பின்வருமாறு:

    கணவன்- இன்றும் இன்றும் என்றும் உப்புமாவா

    வேற ஏதும் டிபன் இல்லையா

    மனைவி- என்ன புதுசா கேட்கிறீர்கள்

    கணவன்- பூரி சுடும் வாசம் வந்ததே

    மனைவி - அது எப்படி வரும்

    கணவன்- அது பக்கத்து போர்ஷனிலா

    மனைவி- ஆங்... இருக்கும்

    கணவன்- இட்லி கண்டு 2 வருஷமானதே

    மனைவி- போன மாசம் தானே சுட்டுக் கொடுத்தேன்

    கணவன்- தோசை டேஸ்ட்டும் மறந்தே போனதே

    மனைவி- நாக்கு செத்து போச்சோ

    கணவன்- நூடுல்ஸ் எந்தன் நாவை கொல்லுதே

    மனைவி- குழந்தைகளுக்கு புடிக்கும்ங்க

    கணவன்- உப்புமா கிண்டும் ஓசை கேட்டால் வயிற்றில் புளியும் கரையுதே
    (இன்றும் இன்றும் என்றும் உப்புமாவா...)

    மனைவி- இந்த பக்கத்து போர்ஷன் பொம்பள எதையாவது வித்தியாசமாக செய்து நம்ம உயிரை எடுக்குது.

    மனைவி - செய்ய தெரியாதுங்க, கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு சமைக்க தெரியாதுனு சொன்னேல்ல, நீங்கள் தான் பரவாயில்லை பரவாயில்லைனு பல்லை இளிச்சிட்டு நின்னீங்க.... இப்ப என்னைய சொன்னா எப்படி, எனக்கு வரதுதான் சமைக்க முடியும். ஏன் நீங்க சொல்லிக் குடுங்க பார்க்கலாம்.

    கணவன்- அரைத்து விடு மாவையும் மெதுவா, வார்த்துவிடு கல்லில் மெதுவா.. பின்னர் ஊற்றிவிடு நெய்யை பதமா, கிடைக்குமே நெய் தோசா

    கணவன்- உருட்டி விடு ஆட்டாவை ரவுண்டா பொரித்து எடு எண்ணெயில் பதமா, மசித்துவிடு உருளையை இதமா, பூரி மசால் ரெடியம்மா

    இப்படி இவர்கள் பாடுவது போய் கொண்டே இருக்கிறது. தற்போதைய குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான விஷயத்தை மிகவும் அழகாக சொல்லியுள்ளனர் பாஸ்கரும், அனுஷாவும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+