For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் கலாமிற்கு ராமேஸ்வரம் மக்கள் இன்று அஞ்சலி: இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவைத் தொடர்ந்து, அவரின் இறுதிச்சடங்குகள், ராமேஸ்வரத்தில் நாளை (ஜூலை 30ம் தேதி) நடைபெற உள்ளது. இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது பேரன் ஷேக் சலீம் கூறியுள்ளார். அப்துல்கலாம் இறுதிச்சடங்கில் பிரதமர் மோடியும், 6 மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடம் தேர்வு

இடம் தேர்வு

மறைந்த அப்துல்கலாமின் உடல் தற்போது டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்குள்ள ராஜாஜி மார்க் இல்லத்தில் 4 மணிமுதல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மக்கள் செலுத்திய பின்னர் அப்துல் கலாமின் உடல், நாளை பிற்பகல் ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட உள்ளது.

கலாமின் உடலை அடக்கம் செய்வதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் கூறியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் அஞ்சலி

ராமேஸ்வரத்தில் அஞ்சலி

அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் ராமதீர்த்தம் அருகே உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது உதவியாளர் பொன்ராம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உடல் அடக்கம் எங்கே

உடல் அடக்கம் எங்கே

அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், இடங்களை நேரில் ஆய்வு செய்கின்றனர். ரயில் நிலையம் அருகே காட்டுபள்ளிவாசல், உதயம் பாலிடெக்னிக், நடராஜபுரம் போன்ற இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஜூலை 30ல் இறுதிச்சடங்கு

ஜூலை 30ல் இறுதிச்சடங்கு

பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு நாளைமறுதினம் வியாழக்கிழமையன்று 11 மணிக்கு நடைபெறும் என அவரது பேரன் ஷேக் சலீம் கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சமும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்

பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்

இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி, 6 மாநில முதல்வர் ராமேஸ்வரம் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக மாநில போலீஸ் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

English summary
Former president Abdul Kalam's burial will be held on day after tomorrow. His body will be taken to Rameswaram tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X