எண்ணூர் துறைமுக பகுதியில் அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகளை அதிகாலையில் பார்வையிட்ட கமல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்ட நடிகர் கமல்- வீடியோ

சென்னை: எண்ணூர் துறைமுகப் பகுதிகளில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டதால் பாழடைந்த இடங்களை நடிகர் கமல்ஹாசன் இன்று அதிகாலை பார்வையிட்டார்.

வடசென்னையில் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்துவாரப் பகுதியில் வல்லூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் நேற்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். வடசென்னைக்கு ஆபத்து என்றும் அதில் கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார்.

Actor Kamal Haasan visits Ennore and Kosasthalaiyar river

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுகப் பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்தா ஜெயராமனும் கமல்ஹாசனுடன் சென்று பாதிப்புகள் குறித்து விவரித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Haasan today visited Ennore creek and Kosasthalaiyar river.
Please Wait while comments are loading...