ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் கருணாஸ் தலைமையில் மனித சங்கிலி.. ராமநாதபுரத்தில்
ஜல்லிக்கட்டுப் போட்டியை வலியுறுத்தி ராமநாதபுரம் அருகே நடிகர் கருணாஸ் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. நடிகர் கருணாஸ் தலைமையில் இந்த மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பல்வேறு நடிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் மாணவர்கள் மற்றும இளைஞர்களுடன் சேர்ந்த போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி நடிகர் கருணாஸ் தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தை அடுத்த சாயல்குடியில் நடிகர் கருணாஸ் தலைமைய்ல மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது,
இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications