அதிகாரம் உள்ளவர்கள் கால்களில் விழ அவசியம் இல்லை: ரஜினி அதிரடி பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசைப்படும் ரஜினி- வீடியோ

  சென்னை: 3வது நாளாக சென்னையில் இன்று ரசிகர்களை சந்தித்தார், நடிகர் ரஜினிகாந்த்.

  மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை இன்று ரஜினிகாந்த் சந்தித்தார். ராகவேந்திரா மண்டபத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. காலை 8.45 மணியளவில் சந்திப்பு தொடங்கியது.

  ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், கூறியதாவது:

  1976-77 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போனபோது அர்ச்சகர் என்னிடம் எனது பிறந்த நட்சத்திரம் கேட்டார். எனக்கு, நட்சத்திரம், கோத்திரம் எதுவுமே தெரியாது.

  பெருமாள் நட்சத்திரம்

  பெருமாள் நட்சத்திரம்

  சச்சு அம்மா அப்போது எனது அருகில் இருந்தார். பெருமாள் நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்ய அவர் அர்ச்சகரிடம் கூறினார். பிறகுதான் எனக்கு தெரிந்தது, எனக்கு உண்மையிலேயே பெருமாள் நட்சத்திரம்தான் என்று.

  கிடா வெட்டி சோறு போடுவேன்

  கிடா வெட்டி சோறு போடுவேன்

  வீரம் விளைந்த மண் மதுரை. அங்கிருந்து வந்துள்ள உங்களையெல்லாம் பார்க்க மகிழச்சியாக உள்ளது. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போட ஆசை. ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் முழுக்க வெஜிட்டேரியன். வேறு இடத்தில் ஒருமுறை அதை பார்ப்போம்.

  சிவாஜி, எம்ஜிஆர் சேர்ந்த கலவை

  சிவாஜி, எம்ஜிஆர் சேர்ந்த கலவை

  உங்களின் உற்சாகம் உணர்ச்சியை புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் வயதை தாண்டி வந்தவன்தான் நானும். சிறு வயதில் பெங்களூரில் இருந்தபோது ராஜ்குமாரின் பெரிய ரசிகன். சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் சேர்ந்ததை போன்றவர் ராஜ்குமார்.

  ராஜ்குமாரை தொட்டு பார்த்தேன்

  ராஜ்குமாரை தொட்டு பார்த்தேன்

  ராஜ்குமாரை முதல் முறையில் பார்த்தபோது அவரது படங்கள்தான் எனது மனதில் ஓடியது. நானும் ராஜ்குமாரை போய் 'டச்' செய்தவன்தான். உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது.

  கடவுள், தாய், தந்தை

  கடவுள், தாய், தந்தை

  கடவுள், தாய், தந்தை ஆகிய மூன்று பேரின் காலில் மட்டுமே விழ வேண்டும். உயிரை கொடுத்த கடவுள், உடலை வளர்த்த தாய், தந்தை ஆகியோர் காலில் மட்டுமே விழ வேண்டும்.

  அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழாதீர்கள்

  அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழாதீர்கள்

  பெரியவர்கள் காலிலும் விழலாம். வயதான பெரியவர்கள் காலில் விழுவது ஏன் என்றால், இந்த கஷ்டமான வாழ்க்கையை நடந்து கடந்து வந்தவர்கள் அவர்கள். அந்த பாதைகளில் நாமும் நடக்கப்போகிறோம் என்பதால், அவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறலாம். ஆனால், பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் கால்களில் விழ அவசியம் இல்லை. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Rajinikanth met fans today in Chennai for the 3rd day. Money, fame, and power are not necessary to fall into the legs, says Rajinikanth.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X