For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டர் சொன்னதுக்காக வாக்கிங் போனார் ஸ்டாலின்.. 'நமக்கு நாமே' பற்றி செந்தில் கிண்டல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவரின் அறிவுரையின்படியே ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தை தொடங்கி நாளொன்றுக்கு நாற்பது கிலோ மீட்டர் நடைபயணம் சென்றார் என்று அதிமுக பேச்சாளரும், நடிகருமான செந்தில் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து நடிகர் செந்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கருணாநிதி, ஸ்டாலினை விமர்சனம் செய்தார்.

இதேபோல நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்த அதிமுக பேச்சாளரும் நடிகையுமான விந்தியாவும், கருணாநிதி கூறிய, கடைசி தேர்தல் என்ற வாக்கியத்தை வைத்து கிண்டல் செய்தார்.

அல்வா

அல்வா

பிரசாரத்தில் செந்தில் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறிய கருணாநிதி, 2 கிலோ அல்வா கூட கொடுக்கவில்லை.

பாட்டு பாடுகிறார்

பாட்டு பாடுகிறார்

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எல்லா திட்டங்களும் கருணாநிதியின் குடும்பத்திற்காகவே செயல்படுத்தப்பட்டது. 2 வருடம் கழித்து திரும்பி வந்த ஒருவரை பார்த்து "பூங்காற்றே திரும்புமா" என கருணாநிதி பாடிக்கொண்டுள்ளார்.

மின்வெட்டு

மின்வெட்டு

திமுக ஆட்சியில் இருளில் மூழ்கி கிடந்த தமிழகம், அதிமுக ஆட்சியில் தான் வெளிச்சத்திற்கு வந்தது. மின்வெட்டு என்பைத தாண்டி, தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.

டாக்டர்கள் அட்வைஸ்

டாக்டர்கள் அட்வைஸ்

மருத்துவர்களின் அறிவுரைப்படியே ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் நடத்தினார். தினமும் 40 கி.மீ தூரம் நடக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் உள்ளார். இதற்கு அரசியலை பயன்படுத்திக்கொண்டார், என்று செந்தில் தெரிவித்தார்.

கடைசி தேர்தல்

கடைசி தேர்தல்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகை விந்தியா, கருணாநிதி அவருக்கு இதுதான் கடைசி தேர்தல் என்று கூறிவருகிறார். திமுகவுக்கும் இதுதான் கடைசி தேர்தல் என்றார்.

English summary
Actor Senthil says Stalin done Namakku Name to obey doctor advice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X