ரஜினியின் ஆன்மிக அரசியல் நல்லதா?... என்ன சொல்கிறார் கவுதமி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நல்ல எண்ணத்துடன் மக்கள் எல்லோம் பயன் அடையக்கூடிய வகையில் அரசியலுக்கு வந்து செயல்படப் போகிறார் என்பது நல்ல விஷயம் தான் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகையும் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவருமான கவுதமி ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Actress Gautami welcomed Rajinikanth's political entry as it is good for people

கவுதமி கூறுகையில், நல்ல எண்ணத்துடன் பொதுமக்கள் எல்லோரும் பயன்அடையக்கூடிய வகையில் செயல்படக்கூடிய ஒரு தலைவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது நல்ல விஷயம் தான். ஒரு கட்சியை அவர் உருவாக்குகிறார் என்பது நல்ல விஷயம் தான் பொதுமக்களாகிய நமக்கு இது தான் வேண்டும். ஆனால் அது வந்து ஆரம்பம் மட்டும் தான்.

ஆன்மிக அரசியல் என்பது அவருடைய விருப்பம். ஆனால் சில உண்மைகள் இருக்கின்றன. இது யாராலும் மறுக்க முடியாத விஷயம். 50 வருடத்திற்கு மேலாக திராவிடக் கழகங்கள் தான் தமிழகத்தில் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றும் கவுதமி கூறியுள்ளார்.

நடிகர் கமல் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த போதும் இந்த தலைமுறைக்கு அரசியலுக்கு யார் வந்தால் சரியாக இருக்குமோ? அவர்களுக்கு நான் உள்பட அனைவரும் ஆதரவாக இருப்போம். கமல்ஹாசன அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என்று கூறி இருந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Gautami welcomed Rajinikanth's political entry as it is good for people, it will benefit all people in the state and also says Spiritual politics is his wish.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற