ஜெயலலிதாவாக மாறி வரும் எடப்பாடியாரைப் பாருங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த ஜெயலலிதா தனது காலில் கட்சியினர் விழுவதை ஒரு சம்பிரதாயமாகவே மாற்றி வைத்திருந்தார். அவர் ஆரம்பித்து வைத்த அந்த சடங்கை தற்போது எடப்பாடியார் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

தினசரி வேலை செய்கிறார்களோ இல்லையோ, தவறாமல் "அம்மா" காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுவதை ஒரு யோகா, உடற்பயிற்சி போல செய்து வந்தனர் அதிமுக தலைவர்கள்.

ADMK cadres fall in Edappadi's feet

குறிப்பாக அமைச்சர்கள் எப்போதும் குணிந்த நிலையிலும், விழுந்த நிலையிலுமாகவே காணப்பட்டனர். இப்போது அந்தக் கலாச்சாரத்தை எடப்பாடியார் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. அவரது காலில் இப்போது விழுந்து வணங்க ஆரம்பித்துள்ளனர். அவரும் அதை உற்சாகமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.

சென்னை அருகே உள்ள சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்த எடப்பாடியாரின் கால்களில் விழுந்து வனங்கினர் அதிமுக நிர்வாகிகள். அதனை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்ட காட்சி இது.

அது சரி எல்லாம் வந்து விட்டது, இந்த சம்பிரதாயத்தையும் தொடர வேண்டியதுதானே!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK Amma party cadres have started their old custom of falling in CM's feet after a big break.
Please Wait while comments are loading...