For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் சோபிக்காத ஸ்டார் பேச்சாளர்கள்

|

சென்னை: அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக சோபிக்கும் அளவு பேச்சாளர்கள் இல்லை என்பதால் வேட்பாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

அதிமுகவில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா செல்லும் பகுதிகளில் மட்டுமே பெரும் கூட்டம் கூடுகின்றதாம். பேச்சாளர்கள் என்று அறிவித்துள்ள நடிகர் ராமராஜனுக்கு மவுசு போய் பல ஆண்டுகள் ஆனதாலும், செந்தில் காமெடி நடிகர் என்பதாலும், பாத்திமா பாபு செய்தி வாசிப்பாளர் என்பதாலும் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்பார்த்த அளவு கூட்டம் சேரவில்லையாம்.

ADMK candidates expect leading stars to campaign for them

மேலும் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேச்சும் சமீப காலமாக அதிமுகவினர் விரும்பும் வகையில் இல்லை என்று கூறப்படுகின்றது. திமுகவில் இருந்து அதிமுக வந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி பேச்சும் பெரிய அளவில் எடுபடவில்லையாம்.

இதனால் ஜெயலலிதாவை மட்டுமே அதிமுக வேட்பாளர்கள் நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது திரைத்துறையில் முன்னணியில் உள்ள நடிகர், நடிகைகள் யாராவது வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தால் நன்றாக இருக்கும் என அதிமுக வேட்பாளர்கள் அழுகாதகுறையாக சொல்கின்றனர். ஆனால், இதை அவர்கள் கட்சி பொதுச் செயலாளரிடம் யார் சொல்லவது என்பது தான் பிரச்சனையாம்.

English summary
ADMK candidates are expecting leading stars of Kollywood to campaign for them as the existing star campaigners are not a hit among the public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X