For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக வேட்பாளர் பட்டியல் ரெடி? நல்ல நாளில் ரிலீஸ் செய்ய ஜெ. திட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விருப்பமனு வாங்கினவங்க எல்லோரும் விறுவிறுன்னு நேர்காணல் நடத்த ஆரம்பிச்சிட்டாங்க... அறிவாலயத்தில நடக்குது... கோயம்பேட்ல நடக்குது... தைலாபுரத்துல வேட்பாளர் லிஸ்டே ரெடியா இருக்காம். ஆனா ஆளுக்கு மொதல்ல மனு வாங்கினவங்க இன்னும் நேர்காணல் நடத்தலையே என்ன சமாச்சாரம்னு அதிமுகவில கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாம் நேர்காணலுக்கு கூப்பிடுவாங்களா? மாட்டாங்களா? அம்மாவை சும்மாவாச்சும் பார்க்கலாமேன்னு மனு போட்டவங்க எல்லோரும் மாவட்டத்தை கேட்டா... எனக்கே எதுவும் தெரியலையேப்பா என்பது பதிலாக இருக்கிறதாம்.

இந்த வருஷம் விருப்பமனு வாங்கின கையோட எல்லாமே ஆன்லைன்ல அம்மா கவனத்துக்கு கொண்டு போயிட்டதாகவும், வீடியோ கான்பரன்சிங்லயே கமுக்கமா வேட்பாளர் நேர்காணலை நடத்திட்டதாகவும் அதிமுகவில பேசிக்கிறாங்க.

ADMK candidates list ready ?

ஒவ்வொருத்தரா நேர்ல கூப்பிட்டு நேர்காணல் நடத்த எல்லாம் நேரமில்லை... விருப்பமனு வாங்கிய கையோடு வேட்பாளர்கள் லிஸ்ட்டை ரெடி செய்து வைத்து விட்ட ஜெயலலிதா. அதை வெளியிடத்தான் நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

2014 லோக்சபா தேர்தலப்ப பிப்ரவரி 24ம் தேதி தன்னோட பிறந்தநாளில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ஜெயலலிதா, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் இதே போல வெளியிட வாய்ப்பு இருக்குன்னு பேசிக்கிட்டாங்க.

பிப்ரவரி 24ம் தேதி ஜோதிடப்படி கீழ் நோக்கு நாளா போனதால வேட்பாளர் பட்டியலை வெளியிடுறதுல மாற்றம் செஞ்சிட்டாங்களாம். பிப்ரவரி 25 மேல்நோக்கு நாள் பிப்ரவரி 26 சமநோக்கு நாள் இந்த நாட்களில் வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட ஆரம்பித்தால், வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கும்னு என்று ஜோதிடர்கள் சொல்லியிருப்பதால வேட்பாளர் பட்டியலை இந்த 2 நாளில் வெளியிடலாம்னு போயஸ்கார்டன் பக்கம் பேசிக்கிறாங்க.

கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது, அதிமுக கூட்டணிப் பேச்சு வார்த்தையில் தேமுதிக, சிபிஐ, சிபிஎம், பார்வர்டு பிளாக், ஆகிய கட்சிகள் இருந்தன. கூட்டணியில் இருந்தவர்கள் கேட்டிருந்த அத்தனை தொகுதிகளையும் காலி செய்து, அதிமுக சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 16, 2011 அன்று வெளியிட்டு ஷாக் கொடுத்தார் ஜெயலலிதா. இத்தனைக்கும் அன்று காலையில்தான் யாருக்கு எந்த இடம், எவ்வளவு சீட் என்பது குறித்த கூட்டணிப் பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருந்தது.

இது கூட்டணி கட்சிகளிடையே கொதிப்பை ஏற்படுத்த கூட்டணியை உடையும் நிலையே உருவானது. இதனால டோட்டல் லிஸ்ட்டே மாற்றப்பட்டு புதிய லிஸ்ட் வெளியானது. அந்த முதல் லிஸ்ட் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டுவரப் படாமலேயே, அவரின் தோழி சசிகலா தரப்பில் இருந்து வெளியானதாக அப்போ பேசுனாங்க. இதற்கு சோ ராமசாமி கூட கண்டனம் தெரிவித்திருந்தார்.

2011 சட்டசபை தேர்தல் போல குளறுபடி எதுவும் இல்லாத வகையில, வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிடனும்னு ஜெயலலிதா உறுதியாக இருக்கிறாராம். இதனால சீட் வாங்கித்தர நாங்களாச்சுன்னு சொல்லிட்டு மூட்டையில காசு வாங்குனவங்க என்ன செய்றதுன்னு தெரியமாக முழிக்க ஆரம்சிட்டாங்களாம்.

நாங்க கூட்டணியிலதான் இருக்கோம்னு சொல்லிட்டு இருக்கிற குட்டி குட்டி கட்சிகளும் திருப்திபடுற மாதிரி சில சீட்டுகளை கொடுத்துட்டு குறைந்த பட்சம் 182 தொகுதிகள் அதிக பட்சம் 200 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்றாங்க. அதாவது கூட்டுத் தொகை 2 வருவது மாதிரி.

அதிமுகவை பொறுத்தவரைக்கும் வேட்புமனு தாக்கல் செய்து மனு வாபஸ் வாங்குற வரை எதுவுமே நிச்சயமிருக்காது. எப்ப வேணும்னாலும் எதுவும் நடக்கலாம் என்பதால் விருப்பமனு கொடுத்தவங்க கோவில் கோவிலாக ஏறி இறங்க அரம்பிச்சிட்டாங்களாம்.

இப்போது சொத்துக் குவிப்பு கேஸ் வேற சுப்ரீம் கோர்ட்டில் வேகம் பிடித்துவிட்டதால், அதிமுக தரப்பில் தேர்தல் விஷயத்தில் கூட பெரிய அளவில் உற்சாகம் இல்லை.முழு கவனமும் டெல்லிப் பக்கமாகவே இருக்கு...!

English summary
CM Jayalalitha has finalised the ADMK candidates list, say sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X