ஹாஹாஹா.. அண்ணாமலையை பார்த்து நாங்கதான் சிரிக்கணும்.. சீறிய அதிமுக மாஜி!
தூத்துக்குடி: எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவார் என்றதற்கு அண்ணாமலை சிரிக்கிறார், அண்ணாமலையை பார்த்து தான் நாங்கள் சிரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சூழ்நிலை வந்தால் எடப்பாடி பழனிசாமி இந்திய நாட்டிற்கு பிரதமராக வர வாய்ப்பு இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி இருந்தார். எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது குறித்த கேள்விக்கு பிரஸ்மீட்டின் போது சிரித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மேலும், "நான் அதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை; கருத்து சொன்னால் தப்பாக போய்விடும். நீங்கள் கேட்ட உடனே நான் சிரித்தேன், அதையே எனது கருத்தாக வைத்துக் கொள்ளுங்கள். பிரதமர் பதவி எந்த அளவுக்கு ஆகிவிட்டது என்றுதான் நான் யோசிக்கிறேன். நாட்டிலேயே நம்பர் ஒன் பிரதமராக மோடி உள்ளார். அவர் மூன்றாவது முறை மட்டுமில்லை, நான்காவது முறையாகவும் பிரதமர் ஆவார். இந்த கேள்விக்கு சிரிப்புதான் என்னுடைய பதில்" என அண்ணாமலை கூறினார்.
இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வாய்ப்பு உள்ளது என்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பதில் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கடம்பூர் ராஜூ, "பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை. தங்களது தலைவரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அவர் அந்த கருத்தினை கூறி இருக்கலாம்.
2014 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி தனித்து நின்றோம். 37 இடங்களில் வெற்றி பெற்றோம். 1990ல் சந்திரசேகர் மற்றும் 1998ல் வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக வர அதிமுக கொடுத்த ஆதரவு தான் காரணம். இதற்கு அண்ணாமலைக்கு சிரிப்பு வரவில்லையா? அன்றைக்கு அவர் இல்லை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து அவருடைய கருத்து என்று கூறிச் சென்று இருக்கலாம். இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. அண்ணாமலையை பார்த்து தான் நாங்கள் சிரிக்க வேண்டி உள்ளது." என காட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் பற்றிப் பேசிய கடம்பூர் ராஜூ, "ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என்பது திமுகவின் வாடிக்கை. நீட் தேர்வை ஒழிக்கக்கூடிய ரகசியம், தந்திரம், மந்திரம், சூட்சுமம் எல்லாம் எங்களுக்கு தெரியும் என்று திமுக தேர்தலின் போது கூறியது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக கூறியது.
ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டு நெருங்கும் நிலையில் நீட் தேர்வினை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்று நாடகம். மக்களை ஏமாளிகளாக நினைத்து ஏமாற்றுகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. அதே வேலையைத்தான் இன்று திமுக செய்கிறது.காலத்திற்கு ஏற்றார் போல் வேஷத்தை மாற்றுகின்ற இயக்கம் திமுக" என விமர்சித்துள்ளார்.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு?












Click it and Unblock the Notifications