அதிமுக பொதுக்குழுவிற்கு 95% நிர்வாகிகள் வருகை- தளவாய் சுந்தரமும் ஆஜர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
95% நிர்வாகிகள் வருகை-தளவாய் சுந்தரமும் ஆஜர்-வீடியோ

சென்னை: வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு 95% பேர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் 95% கூட்டத்திற்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.

ADMK general body meeting 95% functionaries attend

இந்த கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற பட உள்ளன. இன்று நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிகிறது.

தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களை திரும்ப பெற்று கட்சியின் சின்னத்தை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், பொதுச் செயலாளர் பதவிலிருந்து சசிகலாவை நீக்குவது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழைப்பிதழை காட்டினால் மட்டுமே பொதுக்குழு கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தவிர 95% உறுப்பினர்கள் கூட்டத்துற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரன் ஆதரவாளராக இருந்த தளவாய் சுந்தரமும் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK generalbody meeting begins in Vanagaram. 95% admk functioneries attend the meeting.
Please Wait while comments are loading...