பொதுச்செயலராக சசிகலா நியமனம் ரத்து... பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா பொதுசெயலாளர் நியமனம் ரத்து உள்ளிட்ட 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி இணைந்து நடத்திய பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்திலுள்ள ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் கலை 10.35 மணிக்குத் தொடங்கியது. அதில் பொதுக்குழுவைச் சேர்ந்த 98% நிவாகிகள் கலந்துகொண்டனர் எனக் கூறப்படுகிறது.

 Admk general council meeting held in Chennai Vanagaram

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலவை நியமனம் செய்தது ரத்து செய்யப்படுகிறது, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே உள்ளிடட் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச் செயலாளர் பதவி இனி இல்லை. ஆனால் பொதுச் செயலாளருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றபப்ட்டது. காலை 10.35 தொடங்கிய பொதுக்குழு கூட்டம் மதியம் 1.மணிக்கு முடிந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Admk general council meeting held in Chennai Vanagaram and 12 resolution passed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற