பரபரப்பான அரசியல் சூழலில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் பலத்த பரபரப்புக்கிடையே வானகரம் ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகத் தெரிகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம், திட்டமிட்டபடி இன்று வானகரம் ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்தப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 Admk general council meeting started

இந்த பொதுகுழுக் கூட்டத்தில் சசிகலாவும் தினகரனும் கட்சியிலிருந்து நீக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும என்கிற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே நிலவி வருகிறது.

பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் பலத்த சர்ச்சைக்கு இடையே இக்கூட்டம் நடத்தப்படுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Admk general council meeting started at Vanakar Srivaru kalyana pandap.
Please Wait while comments are loading...