ஜல்லிகட்டு போட்டி தடைக்கு தமிழக அரசே முழுக்காரணம்: கனிமொழி
சென்னை: ஜல்லிகட்டு போட்டி தடைக்கு தமிழக அரசே காரணமாகும். போட்டி நடத்த வகுக்கப்பட்டிருந்த விதிமுறையை மீறியதால் தான் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது எனத் திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக மகளிரணி சார்பில் ஆர்.கே.நகர் சிவாஜி நகரில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதனை மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுதர்சனம், ஆர்.டி.சேகர், சற்குண பாண்டியன், இளைய அருணா, மணி, சிம்லா முத்துசோழன், திராவிட செல்வி பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

திமுக தேர்தல் அறிக்கை...
திமுக தேர்தல் அறிக்கை 75 சதவீத பணிகள் முழுமை அடைந்துள்ளன. மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஆராயப்பட்டு அதற்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

ஜல்லிக்கட்டு தடை...
ஜல்லிகட்டு போட்டி தடைக்கு தமிழக அரசே காரணமாகும். போட்டி நடத்த வகுக்கப்பட்டிருந்த விதிமுறையை மீறியதால் தான் கோர்ட்டு தடை விதித்தது. எனவே இதற்கு முழுக் காரணம் அ.தி.மு.க. அரசுதான்.

திமுக போராட்டம்...
தற்போது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் உறுதி அளித்ததை தொடர்ந்து திமுக நடத்த இருந்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காவிட்டால் திமுக களத்தில் இறங்கி போராடும்.

வெள்ள நிவாரணம்...
வெள்ள பாதிப்பு பகுதிகளில் மக்களுக்கு உரிய முறையில் நிவாரணம் சென்றடையவில்லை. வெள்ள நிவாரணத்துக்கு ஏற்கனவே வந்த நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இது குறித்து முழுமையான விவர அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications