For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணிக்கு தயாராகும் அதிமுக... பாஜகவின் வாக்கு வங்கி எவ்வளவு? உளவுத்துறை தீவிர சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேருவதற்கான நகர்வுகளை அதிமுக மேற்கொண்டிருப்பதாகவும் முதல் கட்டமாக அக்கட்சிக்கான உண்மையான வாக்கு வங்கிதான் என்ன என்பது குறித்து தமிழக உளவுத்துறை மிகத் தீவிரமாக சர்வே எடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இக்கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது.

ADMK govt. conducts survey on BJP vote bank

இந்நிலையில் திமுகவிடம் தேமுதிக விதித்த நிபந்தனைகள் என்ன? அதற்கு திமுக தந்த பதில் என்ன என்ற விவரங்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் ஜவடேகர் சென்னை வந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்காக சந்தித்து பேசினார்.

ஆனால் கூட்டணிக்கான இச்சந்திப்பை மரியாதை நிமித்தமான சந்திப்பு தேமுதிக விளக்கம் தர பாஜக அதிர்ந்து போய்விட்டது. ஆக "முன்ன பின்ன" இருந்தாலும் திமுக கூட்டணிக்கு தேமுதிக போக முடிவெடுத்துவிட்டது என்பதையே இந்த சிக்னல்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

இதனால் அதிமுக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பாஜகவுடனான பேச்சுக்களை துரிதப்படுத்தி வருகிறது. இதனால் உளவுத்துறையினர் களமிறக்கப்பட்டு பாஜகவின் வாக்கு வங்கி என்ன? சிறுபான்மையினர் மனநிலை என்ன? என்பது உள்ளிட்டவற்றை குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டு வருகிறதாம்.

அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் பொதுவாக அவ்வளவாக வருவதில்லை என்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் அதிமுக தலைமைக்கு சுட்டிக்காட்டியிருப்பதாகவும் போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
AIADMK govt's Intelligence team now conducting survey on BJP's vote Bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X