For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை இலை சின்னம் கிடைத்தற்கு முப்பெரும் விழா.. முதல்வர் தலைமையில் நாளை நடக்கிறது

இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் நாளை முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மதுரை: இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் நாளை முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. மதுரை கப்பலூரில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த விழா நடக்கிறது.

பல நாட்களாக நடந்து வந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு வழக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ADMK has planned to celebrate victory of twin leaves symbol case

இந்த நிலையில் இந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் நாளை மதுரையில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை கப்பலூரில் நாளை முதல்வர் தலைமையில் இந்த விழா நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் மதுரையில் நாளை நடக்கும் முப்பெரும் விழாவில் கட்சியை சேர்ந்த அனைவரும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். இதன்காரணமாக டிடிவி தினகரன் கூடாரம் நாளையே காலியாக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தனது பத்திரிக்கையாளர் பேட்டியில் குறிப்பிட்டார்.

மதுரை கப்பலூரில் நாளை காலை 11.30 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் அதிமுக கட்சி கொடியை முதலமைச்சர் ஏற்றி விழாவை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.

English summary
ADMK has planned to celebrate victory of twin leaves symbol case. They will prepared for celebration in Madurai at tomorrow, this ceremony is taking place under the leadership of the Chief Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X