For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிக்க தண்ணீர் கேட்ட மக்களை அடித்து விரட்டிய 'அம்மா குடிநீர்' அதிமுகவினர்!

Google Oneindia Tamil News

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரன்யத்தில் பொதுமக்களிடம் அதிமுகவினர் நடந்து கொண்ட விதம் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.

குடிநீர் இல்லாமல் தவித்து வரும் அப்பகுதியினர் குடிநீர் விநியோகம் மோசமாக இருப்பது குறித்து முறையிட்டதற்காக அவர்களை வெறித்தனமாக தாக்கியுள்ளனர் அதிமுக குண்டர்கள்.

கைலவனம்பேட்டை பகுதிக்கு நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லையாம். பல முறை கோரிக்கை வைத்தும் எந்த அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாமலே இருந்து வந்திருக்கிறார்கள். அத்தியாவசிய தேவையான குடிநீரே இங்கு இல்லாததால் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் ஒரு குடீநீர்த் தொட்டி கட்டியிருக்கிறார்கள். ஆனாலும், இதுவரை அந்த தொட்டி பயண்பாட்டிற்கு வரவில்லை.

கடந்த மாதம் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வான காமராஜை சந்தித்த அந்த பகுதி மக்கள் குடிநீர் தொட்டிக்கு கொள்ளிடம் குடிநீரை கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதற்கு, தேர்தலுக்காக உங்கள் பகுதியில் ஓட்டு கேட்டு வருவதற்குள் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம் என பதிலளித்திருக்கிறார் அவர்.

கடந்த 4 ஆம் தேதி இரவு எம்.எல்.ஏ. காமராஜ், தொகுதி வேட்பாளரான டாக்டர் கோபால், மற்றும் அந்த பகுதி அதிமுக பிரபலங்கள், கைலவனம் பேட்டைக்கு ஓட்டு கேட்க போயிருக்கிறார்கள். அப்போது, குடிநீர் தந்துவிட்டு ஓட்டு கேட்க வருகிறோம் என சொல்லிவிட்டு இப்படி வருகிறீர்களே என அந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இதில் கோபமான எம்.எல்.ஏ காமராஜோடு வந்த சுமார் இருநூறு பேரும், கேள்வி கேட்ட பொதுமக்களை சரமாரியாக அடிக்க ஆரம்பித்னர். இவர்கல்தானே நமக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் மூர்க்கமாக தாக்கியுள்ளனர்.

இதில் மாதவன் என்பவர் காயமடைந்தார். அத்தோடு அவர் கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டுள்ளனர் அந்தக் குண்டர்கள்.

மேலும், தனலெட்சுமி, குப்பம்மாள் ஆகிய இரு பெண்களும் காயமடைந்தனர். அவர்களை தற்போது அரசு மருத்துவமனையில் சேர்த்துளளனர். ஆனால் இத்தனை நடந்தும் காவலதுறை படு கடமையாக எதுவுமே நடக்காதது போல அமுக்குணியாக இருந்து வருகிறது. அடித்தவர்கள் மீது வழக்கு போடப்படவில்லை.

இதை அறிந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான எஸ்.கே.வேதரத்தினம் அந்த பகுதிக்கு சென்று, வரும் திங்கட்கிழமைக்குள் பொதுமக்களை தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே மறியலில் ஈடுபடுவேன் கூறியிருக்கிறார்.

இதேபோலத்தான் இந்த கோபால், தொண்டியக்காடு பகுதிக்குப் பிரசாரத்திற்குப் போனபோதும் குடிநீர்ப் பிரச்சினை குறித்து பேசிய மக்களை அவருடன் வந்த அதிமுக வெறியர்கள் தாக்கினராம்.

அதிமுகவினரின் இந்த ரவுடித்தனமான பிரசாரத்தால், கடலோரப் பகுதி மக்கள் அததனை பேரும் கொந்தளித்துப் போயுள்ளனர். ஏப்ரல் 24ம் தேதி இவர்களுக்கு வைத்துக் கொள்வோம் கச்சேரியை என்று விரலைத் தயார் செய்து வெறியோடு காத்திருக்கிறார்களாம்.

English summary
ADMK men attack people who aired their grievances near Vedaranyam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X