For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புனிதப் போருக்கு புறப்பட்டுவிட்டாராம் ஜெயலலிதா: சொல்கிறார்கள் அதிமுகவினர்

|

மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தை புனிதப் போர் என அதிமுக நிர்வாகிகள் வர்ணித்துள்ளனர்.

ADMK men call Jaya's campaign as holy war

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து அவர் காஞ்சிபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். நேற்று மீனம்பாக்கத்தில் பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்களும், அதிமுக நிர்வாகிகளும் ஜெயலலிதாவை கவரும் வகையிலும், திமுகவினருக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் விதவிதமான போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர்.

அதில் ஒன்றில், நாடாளுமன்ற படத்தை போட்டு தேர்தலில் அதிமுக 40க்கு 40 பெறும் என்றும், அதற்காக ஜெயலலிதா புனிதப் போருக்கு புறப்பட்டுவிட்டார் என்றும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்றும் அதிமுக பிரமுகர் சுபம் எஸ்.பாலமுருகன் என்பவர் வாசகங்களை அடுக்கிவிட்டுள்ளார்.

இதுவும் ஒரு புரட்சியே என்று பார்த்தவர்கள் கூறிச் செல்கின்றனர்.

English summary
ADMK men call their party chief cum Jayalalithaa's campaign as holy war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X