சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமைதியாக இருந்ததன் காரணம் என்ன தெரியுமா... சொல்கிறார் தமிழிசை

சட்டசபையில் நேற்று அரங்கேறிய களேபரத்தின் போது அதிமுகவினர் அமைதியாக அமர்ந்திருந்தன் காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று பெரும் களபரங்கள் நடந்தேறிய போது அதிமுக எம்எல்ஏக்கள் அமைதியாகவே இருந்தனர். அதற்கான காரணத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை நேற்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது. அப்போது திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரினர்.

இதற்கு சபாநாயகர் சம்மதிக்காததால் திமுகவினர் பேப்பர்களை கிழித்து வீசியும் நாற்காலிகளை வீசியெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

இதையடுத்து சபைக்காவலர்கள் அவர்களை வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உட்பட திமுகவினர் பலரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன.

சட்டசபையா, சட்டையை கிழிக்கும் சபையா?

சட்டசபையா, சட்டையை கிழிக்கும் சபையா?

இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இது சட்டசபையா.. அல்லது சட்டையை கிழிக்கும் சபையா எனத் தெரியவில்லை.

என்ன நடக்குதுன்னே தெரியல

என்ன நடக்குதுன்னே தெரியல

எதிர்கட்சி தலைவர் சட்டை கிழிக்கப்பட்டது, முதலில் அவர் அனுமதிக்கப்படவில்லை என்றார், சோதனை நடத்தப்பட்டது என்றார். என்னத்தான் நடக்கிறது என்பது தெரியவில்லை.

கூவத்தூர் மனநிலையிலேயே இருந்தனர்

கூவத்தூர் மனநிலையிலேயே இருந்தனர்

கூவத்தூரில் அடைக்கப்பட்டவர்கள் அந்த மனநிலையிலேயே இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் அப்படியே அமர்ந்து இருந்தார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியே வரவில்லை.

ரகசிய வாக்கெடுப்பு கோரியது சரிதான்

ரகசிய வாக்கெடுப்பு கோரியது சரிதான்

திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரியது சரியானது தான். வாக்கெடுப்பு நடக்கும் இடம் அமைதியான சூழலாக இருக்க வேண்டும். அமைதியான சூழலில் வாக்கெடுப்பு நடக்கவேண்டும்.

நேர்மையான களமாக இருக்கனும்

நேர்மையான களமாக இருக்கனும்

இது வருங்கால தமிழகத்தை வழிநடத்தும் ஒரு நிகழ்வு. ஒட்டுமொத்த அளவில் சட்டசபை நேர்மையான களமாக திகழ வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+