For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக அணிகள் இணையவே இணையாது... டெல்லியில் உறுதிபடுத்திய ஓபிஎஸ்

அதிமுக அணிகள் இணைய வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம் ஓபிஎஸ் அணியில் உள்ள மாஜிக்கள்தானாம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவில் உள்ள 3 அணிகளும் ஒட்டு மொத்தமாக ஆதரவு தெரிவித்தாலும், அணிகள் இணைய வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. காரணம் ஓபிஎஸ் அணியில் உள்ள அந்த எம்.பியும், மாஜி அமைச்சர்களும்தானாம்.

பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்த ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்தார். அவரை நம்பி சில எம்எல்ஏக்கள் சென்றனர். சசிகலா ஜெயிலுக்கு போக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை அடிபட்டது. ஆனால் அணிகளில் உள்ளவர்களின் கிண்டல், கேலி பேச்சுக்களால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

சட்டசபையில் டிப்ஸ்

சட்டசபையில் டிப்ஸ்

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அமைச்சர்களுக்கு சில டிப்ஸ்களை கொடுக்கிறார் ஓபிஎஸ்.

இறங்கி வந்த ஓபிஎஸ்

இறங்கி வந்த ஓபிஎஸ்

தர்மயுத்த பயணம் சென்று வந்த ஓபிஎஸ் மேடைகளில் ஆளும் எடப்பாடி பழனிச்சாமியை தாக்கியும் பேசினார். அதே நேரத்தில் அணிகளை இணைத்து விடலாமா என்று ஆலோசனையும் செய்தாராம்.

மைத்ரேயன் தடை

மைத்ரேயன் தடை

அதற்கு எம்.பி மைத்ரேயன்தான் முதலில் தடை போட்டாராம். மக்கள் நம்ம பக்கம் இருக்காங்க. நான் ஒரு தனியார் சர்வே டீமை வெச்சு தமிழ்நாடு முழுக்க சர்வே பண்ணி தரச் சொன்னேன். அதில் இணைப்பு சரிப்பட்டு வராது என்று தெரியவந்துள்ளது என்றாராம்.

இணைப்புக்கு முற்றுப்புள்ளி

இணைப்புக்கு முற்றுப்புள்ளி

சசிகலா, டிடிவி தினகரனை ஏற்றுக்கொண்டு நாமும் அங்கே போய் சேர்ந்தால் மக்கள்கிட்டயும் கெட்ட பெயரைத்தான் சம்பாதிப்போம். அதனால அவங்களோட சேருவதைப் பற்றி யோசிக்கவே வேண்டாம் என்று கூறி ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து டெல்லியில் முகாமிடவே இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார் ஓபிஎஸ். ஜனாதிபதி வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் செய்யவே வந்தோம். அணிகள் இணைப்பு பற்றி பேச வரவில்லை என்றும், அதற்கான அவசியமும் இல்லை என்றும் ஒரே போடாக போட்டு விட்டார் ஓபிஎஸ்.

கதவை சாத்திய ஓபிஎஸ்

கதவை சாத்திய ஓபிஎஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை குழு கலைக்கப்பட்டதாக கூறிய ஓபிஎஸ், பேச்சுவார்த்தைக்கு அவசியமே இல்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை ஆட்சி கலையும் பட்சத்தில் தனி அணியாக தேர்தலில் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

English summary
Panneerselvam rules out AIADMK merger talks for now,Panneerselvam said as per the party constitution he should have been allowed to run the party after the demise of Jayalalithaa as per standard practice laid down by Jayalalithaa whenever extraordinary occasions arose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X