For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் மீண்டும் ஒரு வக்கீல் வெட்டி படுகொலை- வியாசர்பாடியில் பதற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை வியாசர்பாடியில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட வழக்கறிஞரின் பெயர் ரவி என்பதாகும்.

வியாசர்பாடியில் வசிக்கும் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் பயிற்சிபெற்று வந்தார். 45 வயதான அவர் வியாசர்பாடியில் புரம் என்ற என்ற பத்திரிகையிலும் பணிபுரிந்தார். இன்று காலை அசோக் பில்லர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

Advocate Ravi hacked to death in Chennai

பலத்து காயங்களுக்கு ஆளான அவரை அந்த பகுதியிலிருந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்தார். கடந்த ஒரு மாதத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்படுவதில் இது நான்காவது முறையாகும்.

சென்னையில் பட்டப்பகலில் படுகொலை சம்பவங்கள் சர்வசாதரணமாக அரங்கேறி வருகின்றன. வக்கீல்கள் தொடர்ந்து வெட்டிக்கொல்லப்பட்டு வருகின்றனர். சென்னை வில்லிவாக்கத்தில் ஏப்ரல் 12ம் தேதி அழகிரி என்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அழகிரியை தொடர்ந்து சென்னை சூளைமேட்டில் முருகன் என்ற வக்கீல் ஜூன் 6ல் வெட்டிக் கொலை செய்தனர். முருகனை கூலிப்படை மூளும் மனைவி கொன்றது விசாரணையில் தெரிய வந்தது. சென்னை புழலில் அகிலநாத் என்ற வழக்கறிஞர் ஜூன் 16ம் தேதி மர்மநபர்களால் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வியாசர்பாடியில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

English summary
An Advocate name Ravi was hacked to death by unidentified men in full public view in a residential area in Viyarsarpadi on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X