For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா இன்னும் உயிரோடுதான் உள்ளார் என்கிறதா அதிமுக? பொதுக்குழு தீர்மானம் சொல்லும் பாடம்

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், அவருக்கு நோபல் பரிசு வழங்க தீர்மானம் போட்டு அதிர்ச்சி கிளப்பியுள்ளது அதிமுக பொதுக்குழு.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இறந்தவர்கள் பெயரை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய முடியாது என்ற விதிமுறை கூட தெரியாமல் அல்லது தெரிந்தேவோ ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு தர கோரியுள்ளது அதிமுக பொதுக்குழு.

பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979ம் ஆண்டு, இந்தியாவின் 5வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார்.

அப்போது அவர்கள் ஆதிக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும் கோலோச்சியிருந்தது. ஆனால் அதை மீறி விவசாயிகள் நலன்காத்தவர் சரண் சிங்.

விவசாய நண்பர்

விவசாய நண்பர்

சரண் சிங் ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இவையெல்லாம்தான் அவரது ஆட்சியில் பெருமளவுக்கு பெயரை ஈட்டித்தந்தன.

விவசாயிகள் தினம்

விவசாயிகள் தினம்

எனவே, ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த நாளான, டிசம்பர் 23ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாட அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது எப்படி சாத்தியப்படும் என்பதை அதிமுக நிர்வாகிகள் யோசித்தனரா?

முரணான கோரிக்கை

முரணான கோரிக்கை

இதேபோலத்தான், ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு கேட்கும் தீர்மானமும் ரொம்பவே முரணானது. 1974ம் ஆண்டில், மாற்றியமைக்கப்பட்ட நோபல் விதிகளின் படி, இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது கிடையாது.

நோபல் கிடைக்காது

நோபல் கிடைக்காது

1974ம் ஆண்டுக்கு முன்பு கூட, இரண்டு பேருக்கு மட்டுமே, இறந்த பின்பு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்பு, ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுமாம்.

அதிமுக நினைப்பு என்ன?

அதிமுக நினைப்பு என்ன?

1974ம் ஆண்டுக்கு முன்பு, நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பின்பு ஒருவர் இறந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என விதி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஜெயலலிதா உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டுதான் இந்த தீர்மானத்தை அதிமுக நிறைவேற்றியதா என்பதுதான் புரியாத புதிர்.

English summary
AIADMK general body resolution seeking Nobal award for Jayalalitha, but they forgets the rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X