ஒரே ஆபாசம்.. சட்டசபை கட் அடிச்சுட்டு பாத்ரூமில் உட்காரலாமா.. உதயநிதியை கலாய்த்த அமைச்சர் ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக மற்றும் முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் உதயநிதி மற்றும் ஸ்டாலின் குறித்து தவெக அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தாராபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ், "எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்திற்கு வரும் தலைவர், தங்கள் ஆட்சி சாதனைகளை பேச வேண்டும். அவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. ஒன்றும் செய்யாததால் அவரால் பேச முடியவில்லை. இல்லை இல்லை இரண்டு சாதனைகள் செய்துள்ளனர். மறந்துவிட்டேன். டாஸ்மாக் வருவாயை 50,000 கோடி ரூபாயாக உயர்த்தினர்.

Udhayanidhi Stalin Ramesh TVK

ஒரே ஆபாசம் தான்

இரண்டாவது சொந்த கட்சிக்குள்ளேயே உலகளவில் கஞ்சா விற்கும் கஞ்சா வியாபாரிகளை வைத்தது. இவை இரண்டை தவிர அந்த கட்சியினர் வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. பிறகு எப்படி சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியும். உடனே ஆபாசத்தில் இறங்கிவிட்டார். எங்கே பார்த்தாலும் ஆபாசம். சட்டமன்றத்தில் பார்த்தால் ஆபாசமாக பேசுவது, பேட்டி கொடுத்தாலும் ஆபாசம், கட்சி கூட்டத்திலும் ஆபாசம், இப்போது பிரச்சாரத்திலும் ஆபாசப் பேச்சு தான். எங்கள் தலைவர் எங்களை நன்றாக வளர்த்துள்ளார்.

எங்கள் தலைவர் எங்களை மிகச்சிறப்பாக வளர்த்துள்ளார். டிசன்ட் பாலிடிக்ஸ், டிசன்ட் அட்டாக் என்று சொல்லித்தான் அரசியலுக்கு வந்தார். உங்க அப்பா உங்களை ஒழுக்கமாக வளர்த்தியிருந்தால் போகிற இடத்தில் எல்லாம் இப்படி ஆபாசமாக பேசுவீர்களா. கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால், அப்பா அவர்கள் சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களையும் கடந்த 5 ஆண்டுகள் ஒழுங்காக வளர்க்கவில்லை.

1 மணி நேரத்திற்கு மேல்..

5 வருடங்களாக அவர்கள் அமைச்சர்ளும் ஆபாசமாக பேசி பேசி தான், கொளத்தூரில் அப்பா முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக மாறிவிட்டார். அப்படியொரு ஆபாசம். அமைச்சர்கள், அப்பாவின் மகன் எல்லாரும் ஆபாசமாக பேசுகிறார்கள். போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள் என்று சட்டமன்றத்தில் கேட்டோம். உங்கள் அப்பா ஒழுக்கமாக வளர்க்கவில்லை என்றால் அப்படித்தான் பேசுவோம்.

இளம் பெரியார், இளம் சூரியன் என்றெல்லாம் புகழ்கிறீர்கள். சட்டமன்றத்தில் ஏன் சார் ஒரு மணி நேரத்திற்கு மேல் உட்காருவதில்லை என்று கேட்டார். அப்போது கீழே இருந்து ஒருவர் பாத்ரூம் என்று சொல்ல அனைவரும் சிரித்தனர். தொடர்ந்து பேசிய ரமேஷ், ஆயிரம் இருந்தாலும் ஒரு எதிர்க்கட்சி தலைவர் பாத்ரூமில் அமர்ந்துள்ளார் என்று திரும்பி திரும்பி சொல்லவே கூடாது. இனிமேல் அவர் பாத்ரூமில் உட்கார்ந்துள்ளார் என்று யாரும் சொல்ல கூடாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+